கண்ணுக்குத் தெரியாத மின் காந்த அலைகளினூடாக பின்னப்பட்ட வலைத்தளம் இணைத்து வைத்த உறவுகளை பெரும்பாலும் வாசிப்பிலும், பின்னூட்டங்களிலும் சில சமயம் பேச்சிலும், மின் உரையாடலிலும் மட்டுமே சந்திக்க முடிகிறது
இதோ...
ஒரு வாய்ப்பு கைகூடி வருகிறது... ஒருவருக்கொருவர் கரம் குலுக்கி, விழிகளை உற்று நோக்கி, “அட நீங்களா அவரு” என ஆச்சரியங்களைச் சுமக்க...
நீண்ட நாளாய் மனதில் மிதந்த கனவு. பல தளங்களில் மிக அற்புதமாக தங்கள் எண்ணங்களைப் படைத்து வரும் படைப்பாளிகளைச் சந்தித்து உரையாட...
ஈரோட்டில் பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்ற எண்ணத்தை போன பகிர்தலில் வெளிப்படுத்தியதையொட்டி வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் இருக்கும் பதிவர்கள் தங்கள் விடுமுறையை இதற்கு ஏற்ப மாற்றியமைத்து கலந்து கொள்வதாக மின் உரையாடலில் கூறியது பெருமகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.
20.12.2009 ஞாயிறு மாலை ஒரு மூன்று மணி நேரம் ஈரோட்டில் பதிவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் சங்கமமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் எளிதில் கலந்து கொள்ளும் வகையில் ஞாயிறு மாலை 3 மணி அல்லது 4 மணிக்குத் துவங்கி மாலை 7 மணிக்குள் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.
சங்கமம் நடக்கும் இடத்தை எத்தனை பேர் கலந்து கொள்கிறீர்கள் என்பதை அடிப்படையாக வைத்து 15ம் தேதி அறிவிக்கிறோம். இடம் நகரத்தின் மையத்திலோ அல்லது இயற்கை சூழ்ந்த சூழலிலோ இருக்கும்.
தயவுசெய்து பதிவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் தங்கள் வருகையை முன் கூட்டியே எங்களில் யாரிடமாவது உறுதி செய்துகொள்ளவும்.
வால்பையன் 99945-00540
ஈரோடு கதிர் 98427-86026
ஆரூரன் 98947-17185
பாலாசி 90037-05598
ராஜாஜெய்சிங் 95785-88925 (அகல்விளக்கு)
இந்த சங்கமம் குறித்து விருப்பமுள்ளவர்கள் தங்கள் வலைப்பக்கத்தில் இடுகையாக எழுதி அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். இந்த சங்கமத்தைச் சிறப்பாக நடத்திட ஈரோடு பகுதி பதிவர்கள் அனைவரையும் கைகோர்க்க அன்போடு அழைக்கிறேன்.
இந்த சங்கமத்தில்
* பதிவர்களுக்கிடையேயான அறிமுகம்
* நட்பை மேம்படுத்துதல்
* பதிர்வர்கள் வாசிப்பாளர்கள் பரஸ்பரம் சந்திக்கும் வாய்ப்பு
* பதிவுலகம் பற்றி சந்தேகங்களுக்கு தீர்வு
* எழுதுவது பற்றிய தயக்கத்தை தகர்த்தல்
* சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த பகிர்வு
அனைத்து நண்பர்களும் இதையே சங்கமத்திற்கான அழைப்பாக கருதி கலந்து கொள்ள வேண்டுகிறோம்
எங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு... உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...
சங்கமம் குறித்த வால்பையனின் இடுகை
என்னுடைய மின்னஞ்சல் முகவரி: namakkalshibi@gmail.com
Saturday, December 05, 2009
பதிவர்கள், வாசகர்கள் சங்கமம் - ஈரோடு
பிதற்றியவர் நாமக்கல் சிபி at Saturday, December 05, 2009 0 பின்னூட்டங்கள் தொடுப்புகள்
Sunday, November 01, 2009
காலம் உங்கள் காலடியில்
பிதற்றியவர் நாமக்கல் சிபி at Sunday, November 01, 2009 8 பின்னூட்டங்கள் தொடுப்புகள்
வகை : TIME MANAGEMENT, நூல் அறிமுகம்
Thursday, October 22, 2009
மாஸ்டர்(!?) கணேஷ் - ஆர்த்தி : திருமணம் : அக்டோபர் 23
பிதற்றியவர் நாமக்கல் சிபி at Thursday, October 22, 2009 4 பின்னூட்டங்கள் தொடுப்புகள்
வகை : வாழ்த்துக்கள்
Monday, October 05, 2009
திரைவிமர்சனம் : எந்திரன்- தி ரோபோ
படம் வரும் வரும்னு எத்தினி நாளுக்குத்தான் தேவுடு காக்குறது! அதான்! இப்பவே எழுதி வெச்சிட்டேன்! படம் ரிலீசான பிறகும் படிச்சா ஒண்ணியும் பெரிசா வித்தியாசமும் இருக்க்கப்போறதில்லை!
ரோபோ- இயந்திர மனிதன் என்கிற பொருளில் படத்தின் தலைப்பு இருப்பதால் படம் முழுக்க ஒரு ரோபோ (ஜட்ஜ்மெண்ட் ஆர்னால்டு போல ரோபாகவே வருவார் என்றோ அல்லது "என் இனிய இனியந்திரா" தொடரில் வருவது போல சில காட்சிகளுக்காவது "நான் ரனினி நீ ஐஸ்வர்யா, நான் ரஜினி நீ ஐஸ்வர்யா" என்றெல்லாம் தத்துப்பித்தென்று டயலாக் பேசிக்கொண்டோ வருவார் என்றெல்லாம் எதிர்பார்த்து தியேட்டரிலோ/அல்லது திருட்டு டிவிடொ பிளேயர் முன்பொ அமர்ந்திருந்தீர்கள் என்றால் ஐ யாம் வெரி ஸாரு டூ ஸே! அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை!
தமிழ்ச்சினிமா மசாலா டிரெயிலர் கலாச்சாரத்தில் இருந்து சற்றும் விலகாத இன்னுமொரு காஸ்மெடிக் மசாலதான் இதுவும்! டியெடிலர் காட்சிகளில் காண்பிக்கப்படும் பரபரப்பான காட்சிகள் படம் முழுக்க வியாபித்திருக்கும் என்று நினைத்துப் போனால் அந்த டியெயிலர் காட்சிகளிலேயெ இரண்டு படத்தின் நீளம் கருதி கத்தரிக்கப் பட்டிருக்கக் கூடும்!
ஒரு சோத்துக்கு ஒண்ணே முக்கால் பானை பதம் - என்பதே தமிழ்ச்சினிமா விளம்பர யுக்தி! இதே யுக்திதான் ரோபோவும்!
ரோபோ எனப்படும் அரதப் பழசான(இந்தப் படம் ரிலீஸாக்கியிருக்கும் நேரம் என் அண்ணன் மகன் அழகர் கார்த்திக் கூட இந்த டெக்னாலஜியை அரதப் பழசு என்றுதான் சொல்லக் கூடும், இப்போ அவனுக்கு வயசு டிசம்பர் வந்தா 1) இயந்திர மனிதன் கெட் அப் பை மாட்டிக்கொண்டு ஓரிரண்டு காட்சிகளில் வந்து போகிறார். கந்தசாமியில் கோழி வேஷம் போட்ட சீயான் மாதிரி! விளம்பரப் படங்களை பார்த்து நாம் ஏதோ வித்தியாசமான கெட் அப் என்று நம்பி போயி உட்கார்ந்தோம் அல்லவா! அதே கதைதான் இங்கேயும்!
சங்கர் சார்: ரொபாடிக் எஞ்சினியரிங்க் இப்ப ஒண்ணாம் வகுப்பு சிலபஸ்லயே வரப் போகுதாம். பசங்களுக்கு உங்க படத்தை பார்த்தா காமெடியா இருக்கப் போகுது! பசங்க கூட டெக்லாலஜிக்கல் லாஜிக் ஓட்டைகளை விமர்சிக்கப் போகிறார்கள்! என்ன செய்யப் போறீங்களோ? :(
படம் பிரம்மாண்டம் என்று சொல்லப்(விளம்பரப்படுத்தப்)படும் இன்னொரு காரணம் : கதாநாயகி : முன்னால் உலக அழகி ஐஸ்வர்யா ராய்!
நடனக் காட்சிகளில் நளினம். ஜீன்ஸ் போலவே! அதையெ எல்லாப் படத்திலும் பார்த்துகிட்டிருக்க முடியுமா? வித்தியாசமா வில்லி ரோல் கொடுத்தப்ப வேணாம்னுட்டீங்க! அதுக்குப் பழிவாங்கிட்டாங்க பார்த்தீங்களா? உங்களுக்கும் இந்தப் படத்துல ஈக்வெல் ரோல்னு வேற சொன்னாங்க! அதுக்காக தன்னோட ரோல் லெவலை தலைவர் இவ்ளோ மட்டமா குறைச்சிக்குவாருன்னு எதிர்பார்க்கவே இல்லை! உங்களுக்குப் பதிலா ஏதாச்சும் ஒரு மொக்கக துணை நடிகையைப் போட்டிருந்தாலும் ஒண்ணும் வித்தியாசம் இருந்திருக்கப் போறதில்லைன்னு உங்களுக்கு நெசமாவெ புரியலயா தாயி?
ஐஸ்வர்யாவேதான் ஜோடியா வேணும்னு அவங்க கால் ஷீட்டுக்காக்வே காத்திருந்து இப்படியொரு மொக்கை அவசியமா தலவரே! பொண்ணு பொருள் புகழ் இதெல்லாம் நம்ம பின்னாடி வரும்னு எப்பவோ சொன்னீங்களே தலைவா! ஓ! அதெல்லாம் டயலாக்கா! நீங்களா சொன்னதில்லையா! அப்ப சரி!
கதை : என்னாது கதையா? டைரக்டர் அடிக்க வருவாரே! தலைவர் படத்துல வேற என்னங்க எதிர்பார்க்குறீங்க! நாட்டுக்கு நல்ல செய்யற தலைவர்! விஞ்ஞான விபரீங்களை நிகழ்த்தி பணம் பண்ண நினைக்கிற வில்லன்! அவனை நல்ல விதமா திருத்த நினைச்சி வீதிக்கு வந்துடறாரு! ஒரே பாட்டுல எல்லாட் டெக்னாலஜியும் கத்துகிட்டு வில்லனோட ரூட்லயே களத்துல குதிக்கிறாரு! நடுவுல வில்லனோட மாமன் மகள் ஐஸ்வர்யா கூட காதல்! வெளிநாடெல்லாம் போயி டூயட் பாடி புரொடியூசர் வயித்துல கொஞ்சம் புளியயக் கரைச்சிட்டு திரும்ப வந்து வில்லனோட மோதுறாரு!
பாடல்கள்: வைரமுத்து & பா.விஜய்!
கேக்க இனிமையான பாடல்களா இருந்திருக்க வேண்டியது! சங்கர் & ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியாச்சே! பிரம்மாண்டம்னு சொல்லி பின்னியெடுத்திருக்காங்க! பாடல்கள் புரியணும்னா கையோட ஒரு டிக்ஷனரியும் கொண்டு போங்க!
பாவம் வைரமுத்து! பா.விஜய் தற்கால லௌகீகங்கள் புரிஞ்சவர்! சோ நோ வரீஸ்!

நடனம்: ராஜூ சுந்தரம், அதிக வேலையில்லை இவருக்கு! தலைவர் படத்துல டான்ஸா? ஹே ஹே ஹெஹெஹேஹே!

சண்டைப் பயிற்சி : யூயேன் வூ பிங், பேரைச் சொல்றதே சண்டை போடுற மாதிரி இருக்குல்ல! படத்துலயும் அம்புட்டுத்தான்! தலைவருக்குத்தான் இதெல்லாம் சரிப்பட்டு வரதில்லையே! அப்புறம் ஏன் இந்த காமெடி?
ஒளிப்பதிவு ஓகே! சவுண்ட் & சயிண்டிஃபிக் எஃபெக்ட்ஸ் என்ற பெயரில் இம்சையைக் கூட்டி இருக்கிறார்கள்! என்ன கொடுமை சார் இது! நாங்க பாவம்! அழுதுடுவோம்!
பிதற்றியவர் நாமக்கல் சிபி at Monday, October 05, 2009 41 பின்னூட்டங்கள் தொடுப்புகள்
வகை : விமர்சனம்
Friday, October 02, 2009
கருமமா, கவிதையா.. உங்கள் சாய்ஸ்!
எப்பவாவது எட்டிப்பார்த்து
கவிதைன்னு நினைச்சுவந்து
கருமத்தையா படிச்சிட்டோம்னு
கவலைப் பட்ட
நண்பனுக்கு!
எப்படியெல்லாம் எழுதிவெச்சா
கவிதைன்னு ஒத்துக்குவே
ரூல்ஸு புக்கு இருந்ததுன்னா
அனுப்பிவைப்பா ராசா எனக்கு!
வரி ஒண்ணுக்கு
ரெண்டு வார்த்தை
மடக்கி எழுத
கவிதை வரும்
எனக்கு தெரிஞ்ச
இலக்கணத்தில்
எழுதிப் பிழைப்பை
ஓட்டி வந்தேன்!
கவிதைன்னு எழுதறதெல்லாம்
கருமம்னு சொல்லிப்புட்டா
நாங்க அதை
ஒத்துக்கணுமா?
நம்மலால முடியாது ராசா!
என்னவெல்லாம்
எப்பவெல்லாம்
எழுதணும்னு
எனக்குத் தெரியும்!
உம்ம எழுத்து
எப்பவெல்லாம்னு
முடிவு பண்ண
உனக்கு உரிமையிருக்கு!
எங்க எழுத்து
எப்பன்னெல்லாம்
நாங்களே பார்த்துக்குறோம்!
உனக்கெதுக்கு
ராசா வீண் சிரமம்?
நாங்க எழுதுறதுதான் கவிதை!
நாங்க எழுதுறதுதான் கவுஜை!
நாங்க எழுதுறதுதான் கட்டுரை!
நாங்க எழுதுறதுதான் கதை!
நாங்க எழுதுறதுதான் அரசியல்!
எதை வேணும்னாலும்
எப்ப வேணும்னாலும்
எப்படி வேணும்னாலும்
எழுதிகிட்டேதான் இருப்போம்!
மத்தவங்க சர்டிஃபிகேட்
எங்களுக்கு தேவையில்லை!
எங்களோட சர்டிஃபிகேட்
உங்களுக்கு எதுவுமில்லை!
புரியாதவங்க இங்கன போயி பாருங்க
பிதற்றியவர் நாமக்கல் சிபி at Friday, October 02, 2009 37 பின்னூட்டங்கள் தொடுப்புகள்
வகை : எதிர்கவுஜை
Tuesday, September 29, 2009
பதிவர்கள் தேவை...................!
ரொம்ப நாளா பதிவு எழுதுறதை நிறுத்தினதால புதுசா ஏதாச்சும் எழுதலாம்னு பார்த்தா ஒரே சோம்பேறித்தனமா இருக்கு!
அதனால நான் சொல்லச் சொல்ல தட்டச்சித்* தர பதிவர்கள் யாராச்சும் முன்வந்தீர்கள் எனில் தனிமடலிலோ/பின்னூட்டத்திலோ தெரியப் படுத்தவும்!
*சம்பளம்/தங்குமிடம்/போனஸ்/பி.எஃப் என்று எதுவும் கிடையாது. தன்னார்வப் பதிவர்கள் மட்டுமே வரவேற்கப் படுகிறார்கள்!
பிதற்றியவர் நாமக்கல் சிபி at Tuesday, September 29, 2009 34 பின்னூட்டங்கள் தொடுப்புகள்
வகை : ஹாஆஆவ்வ்வ்வ்
Tuesday, September 01, 2009
நாங்கதான் இருக்கம்ல!
பிதற்றியவர் நாமக்கல் சிபி at Tuesday, September 01, 2009 12 பின்னூட்டங்கள் தொடுப்புகள்
Friday, July 31, 2009
அடுத்தது என்ன? அருணாச்சல தரிசனம்தான்...!
ரொம்ப நாளா பிளான் பண்ணி போக முடியாமலே இருந்தது! இன்னிக்குதான் வாய்ப்பு வந்திருக்கு! இன்னொயோட சேர்த்து ஞாயிறு வரைக்கும் ஆஃப் எங்களுக்கு! இன்னும் புது ஆஃபீஸ்க்கு பவர் வரலை! ஜென் செல்டயும் ஓட்டமுடியாது! அதான் ஞாயிறு வரைக்கும் லீவு விட்டுட்டாங்க!
எங்க ஆஃபீஸ்ல கிராஃபிக்ஸ் டிசைனர்(!?) பெருசு (எ) முத்தமிழ் கிட்டே கேட்டேன்! என்னை திருவண்ணாமலைக்கு கூட்டிட்டுப் போங்கன்னு! சரின்னுட்டார்! அதான் மதியம் பஸ் பிடிச்சா கூட சாயங்காலம் போயிடுவோம்!
கிரி வலம்தான்!
பிதற்றியவர் நாமக்கல் சிபி at Friday, July 31, 2009 13 பின்னூட்டங்கள் தொடுப்புகள்
வகை : பொதுவானவை
Wednesday, July 29, 2009
UNDER MAINTENANCE
பிதற்றியவர் நாமக்கல் சிபி at Wednesday, July 29, 2009 4 பின்னூட்டங்கள் தொடுப்புகள்