BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS
Showing posts with label அறிவிப்பு. Show all posts
Showing posts with label அறிவிப்பு. Show all posts

Wednesday, March 24, 2010

பிதற்றல்கள் இனி இல்லையா....!? - ஒரு பொது அறிவிப்பு

இதுவரையில் நாமக்கல் சிபி என்ற பெயருடன் பிதற்றல்கள், மனமும் நினைவும், கலாய்த்தல் திணை போற வலைப்பூக்களில் எழுதிக் கொண்டிருந்த நான் இன்று முதல் என்.ஆர்.சிபி என்ற பெயரில் எழுத இருக்கிறேன்!

அப்டேட்ஸ் : பிதற்றல்கள் வலைப்பூ - மூடப்படுகிறது. இனி அதற்குப்பதிலாக சித்திரப்பாவை என்ற புதிய வலைப்பூவில் எழுதுவேன்! மற்ற வலைப்பூக்கள், மற்றும் குழும வலைப்பூக்களில் புதிய பெயருடன் தொடர்ந்து எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

Friday, March 05, 2010

சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்

தமிழ் மொழியின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3 ஆம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது.

1. சுஜாதா சிறுகதை விருது: சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கு

2. சுஜாதா நாவல் விருது: சிறந்த நாவலுக்கு

3. சுஜாதா கவிதை விருது: சிறந்த கவிதைத் தொகுப்பிற்கு

4. சுஜாதா உரைநடை விருது: சிறந்த கட்டுரைத் தொகுப்பிற்கு

5. சுஜாதா இணைய விருது: சிறந்த வலைப்பதிவு(blog) அல்லது இணைய தளத்திற்கு(web site)

6. சுஜாதா சிற்றிதழ் விருது: சிறந்த சிறுபத்திரிகைக்கு

விதிமுறைகள்

1. முதல் நான்கு பிரிவுகளில் 2008-2009 ஆண்டு வெளிவந்த நூல்களில் 2 பிரதிகள் அனுப்பப்படவேண்டும். எழுத்தாளரோ பதிப்பாளரோ, அல்லது வாசகர்களோகூட நூல்களை அனுப்பலாம். எழுத்தாளரைப்பற்றிய தகவல்கள் மற்றும் முகவரி தனித்தாளில் எழுதி நூல்களுடன் அனுப்பவும். நூல்களில் எதுவும் குறிக்கப்படவேண்டியதில்லை.

2. 5 ஆவது பிரிவில் தமிழின் சிறந்த வலைப்பதிவு அல்லது இணையதளத்திற்கு வழங்கப்படும். அந்த இணைய தளத்தை அல்லது வலைப்பதிவை நடத்துபவர்கள் தம்மையும் தமது இணைய பக்கங்களையும் பற்றிய சிறு குறிப்புடன் அதில் வெளிவந்த முக்கியமான ஆக்கங்களின் பத்து சுட்டி(link)களையும் அனுப்பவேண்டும். அனுப்பவேண்டிய முகவரி: sujathaawards@gmail.com

3. 6 ஆவது பிரிவில் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த சிற்றிதழ்களிலிருந்து பிரதிகள் அனுப்பப்படவேண்டும். அந்த ஆண்டில் குறைந்த பட்சம் மூன்று இதழ்களாவது வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அந்த ஆண்டில் வெளிவந்த ஒவ்வொரு இதழிலிருந்தும் ஒரு பிரதி வீதம் அனுப்பினால் போதுமானது.

4. விருதுக்குரிய தேர்வுகள் தமிழின் முண்ணனி எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களால் மேற்கொள்ளப்படும். தேர்வு முறை குறித்த தகவல்கள் பகிரங்கமாக வெளியிடப்படும்.

5. தேர்வுக்கான விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: மார்ச் 31, 2010

6. விருதுகள் மே. 3, 2010ஆந்தேதி சுஜாதாவின் பிறந்த தினத்தில் வழங்கப்படும்

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:

சுஜாதா விருதுகள், உயிர்மை,11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600018,

மின்னஞ்சல்:sujathaawards@gmail.com தொலைபேசி:91-44-24993448

Monday, February 01, 2010

நன்றி வணக்கம் : ஈரோடு


கடந்த சில மாதங்களாக ஈரோட்டில் வாசம் செய்த நான் தற்சமயம் மூட்டை முடிச்சிக்களுடன் மீண்டும் நாமக்கல்லிற்கே திரும்பி விட்டேன். உடனடியாக அனைவருக்கும் தெரியப்படுத்தவில்லை! மன்னிக்கவும்!

கடந்த டிசம்பர் 15 க்கு பிறகு ஈரோட்டில் நான் பணிபுரிந்த அலுவலகத்திற்கு போட்ட நன்றி வணக்கம் கார்டை இப்போது இங்கேயும் போட்டிருக்கிறேன்!

ஈரோடு வாழ் பதிவுலக நண்பர்கள் அனைவரிடம் இருந்தும் விடை பெறுகிறேன்!
நன்றி வணக்கம்!

முன்பு போல அதிகநேரம் இணையத்தில் செலவிட இயலாத நிலையில் இருப்பதால், மீண்டும் என்று பதிவிட இயலும் என்று தெரியாமல்,

தற்காலிக விடை பெறுகிறேன்!

நன்றி வணக்கம்!

Free Website Hosting