BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, November 01, 2009

காலம் உங்கள் காலடியில்


நூல் : காலம் உங்கள் காலடியில்

ஆசிரியர் : சோம.வள்ளியப்பன்

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

விலை: ரூ 80


"நமது லட்சியமும் உழைப்பும் எத்தனை சிறப்பானவையாக இருந்தாலும் வெற்றியின்ன் சூட்சுமம், நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் ஒளிந்திருக்கிறது"என ஆசிரியரின் அறிமுகத்தோடு ஆரம்பமாகிறது இந்நூல்!


மனிதவளம், மூலப்பொருள்கள் போன்றே நேரம் என்பதும் ஒரு வளம்தான்! ஆனால் இழப்பீடு செய்யமுடியாத வளம்! "TIME AND TIDE WAIT FOR NO MAN"என்பார்களே, அந்த TIME என்னும் நேரத்தை எப்படிச் சேமித்து அந்த வளத்தைப் பயனுள்ள முதலீடாக மாற்ற வேண்டும் என்பதையும், அப்படிச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அசத்தலாகச் சொல்லி இருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்!


நியூ செஞ்சுரி புத்தகக் கண்காட்சியில் இந்நூலைப் பார்த்ததுமே கவர்ந்ததால் கையிலெடுத்துக் கொண்டேன்! பக்கங்களைப் புரட்டவும், "ஆஹா!இது நமக்கு மிகவும் அவசியப்படுமே" என்று வாங்கிவந்த கையோடு ஒரு மணி நேரத்தில் படித்தேமுடித்தேன்! பக்கங்களைப் புரட்டப் புரட்ட இதைப் படிக்கச் செலவழிக்கும் இந்த ஒரு மணி நேரமே என்னுடைய பயனுள்ள முதல் முதலீடாக இருக்கும் என்ற எண்ணத்தை இந்நூல் ஏற்படுத்தத் தவறவில்லை!


உண்மையிலே TIME MANAGEMENT என்னும் விஷயத்தில் நாம் எவ்வளவு அசிரத்தையாக இருக்கிறோம் என்பதை எளிய உதாரணங்கள் மூலம் அழகாக விளக்கப் பட்டிருக்கிறது! ஒரு நாளின் திரும்பக் கிடைக்காத எத்தனை மணித்துளிகளை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நன்கு உணர்த்துகிறது!


மேலும் நாம் பயன்படுத்தும் நேரம் எத்தகைய முறையில் வீணாகிறது/பயனளிக்கிறது என்று நமக்கு நாமே சுயபரிசோதனைகள் மூலம் அறிந்து வீணாகச் செலவழிக்கும் நேரங்களைக் கண்டுணர்ந்து கொள்ள சில எளிய அட்டவணைகளையும் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் கொடுத்துள்ளார்!


ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கான முன் தயாரிப்பு முதல்கொண்டு எவ்வாறு வீண் தாமங்களைத் தவிர்த்து நேரத்தை எவ்வாறு சேமிக்கலாம் என்று கூறியுள்ளார்!


EFFICIENCY, EFFECTIVENSS பொன்றவை பற்றியும், அவற்றிற்கிடையேயான வித்தியாசம் என்ன? எஃபெக்டிவ்னஸாக செய்வதால் எவ்வாறு நேரம் உபரியாகக் கிடைக்கிறது.... இப்படி எத்தனையோ விஷயங்கள் அழகாக, எ ளிமையாக அருமையாகச் சொல்லப் பட்டிருக்கிறது!


படித்துமுடிக்கும் வரை கூட பொறுமை இல்லாமல் உடனடியாக ஒரு எக்ஸெல் கோப்பைத் திறந்து இனி நாமும் தினத்தோறும் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு, திட்டமிட்டு வேலை செய்து நேரத்தைச் சேமிக்க முடிவெடுத்துவிட்டேன்!




8 பின்னூட்டங்கள்:

Ungalranga said...

நல்ல பகிர்வு..!!

காலம், தண்ணீர், பணம்,நல்ல குணம், நல்ல மனிதர்கள், நட்பு, காதல்..இவை அனைத்தும் வாழ்வின் முக்கியமானவை..இதில் ஒன்றை வீணடித்தாலும் அதற்கு மிக வருந்தவேண்டி வரும்..எங்கோ படித்தது இந்த வரிகள்..இந்த பதிவை பார்த்ததும் நினைவுக்கு வந்தது...!!

ஏஜண்ட் NJ said...

//படித்துமுடிக்கும் வரை கூட பொறுமை இல்லாமல் உடனடியாக ஒரு எக்ஸெல் கோப்பைத் திறந்து இனி நாமும் தினத்தோறும் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு, திட்டமிட்டு வேலை செய்து நேரத்தைச் சேமிக்க முடிவெடுத்துவிட்டேன்! //

Good start...!

Wish you would continue filling the excel-workbook; Please inform us once you fill-in first 5 pages fo the worksheet.!!

by the way, How R U, Sibi! Long time, no contact!!

;-) Agent NJ

(Font problem, so typed in English)

செ.முததமிழ்செல்வன் said...

Good Post

Dhavappudhalvan said...

2007 ஜூனுக்கு பிறகு எம் வலைப்பதிவில் உம்மை சந்திக்க முடியவில்லை.

உங்களின் இந்த பதிவு மிக்க அருமையும், உபயோகமானதும் கூட. வரவிருக்கின்ற தொடர் விழாக்களுக்கு எமது இனிய நல்வாழ்த்துக்கள்.

Earn Staying Home said...

திட்டம் தீட்டுதல் மிகவும் தேவையானதாகும்

துபாய் ராஜா said...

நல்லதொரு பகிர்வு நாமக்கல்லாரே...

cheena (சீனா) said...

ஹாய் சிபி

நான் நினைத்திருந்த சிபி வேற - ஈரோட்ல பாத்த சிபி வேற - எதிர் மாறா இருந்தீங்க - ம்ம் இந்த மாதிரி நல்ல செய்லகள் எல்லாம் செய்யற பழக்கம் உண்டா - அது சரி - நல்லாருங்க

நல்வாழ்த்துகள் சிபி

இனியன் பாலாஜி said...

நல்ல பதிவு
நண்பரே
எக்ஸெல் திறந்து நேரம் வீணாக்குவானேன்
அதற்குள் வேறு ஏதாவது வேலையை கவனிக்கலாமே என்று தோன்றுகிறது.எனக்கு
ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதே பத்தவில்லை. நீங்களெல்லாம் எப்படிதான் சமாளிக்கிறீர்களோ நண்பர்களே

iniyan balaji

"காலம், தண்ணீர், பணம்,நல்ல குணம், நல்ல மனிதர்கள்,
நட்பு, காதல்."
.இவை அனைத்தும் வாழ்வின் முக்கியமானவை.
ரஙக‌ன். மிகவும் அருமை

Free Website Hosting