BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Wednesday, March 24, 2010

பிதற்றல்கள் இனி இல்லையா....!? - ஒரு பொது அறிவிப்பு

இதுவரையில் நாமக்கல் சிபி என்ற பெயருடன் பிதற்றல்கள், மனமும் நினைவும், கலாய்த்தல் திணை போற வலைப்பூக்களில் எழுதிக் கொண்டிருந்த நான் இன்று முதல் என்.ஆர்.சிபி என்ற பெயரில் எழுத இருக்கிறேன்!

அப்டேட்ஸ் : பிதற்றல்கள் வலைப்பூ - மூடப்படுகிறது. இனி அதற்குப்பதிலாக சித்திரப்பாவை என்ற புதிய வலைப்பூவில் எழுதுவேன்! மற்ற வலைப்பூக்கள், மற்றும் குழும வலைப்பூக்களில் புதிய பெயருடன் தொடர்ந்து எழுதுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்!

Friday, March 19, 2010

இருத‌ய‌நோய்:- அவதிப்படும் 7 மாதக் குழந்தைக்கு உதவி தேவை!


இருத‌ய‌நோய்:- அவதிப்படும் 7 மாதக் குழந்தைக்கு உதவி தேவை!

இன்று பிர‌ப‌ல‌ த‌மிழ் வெப்சைட்டான‌ த‌ட்ஸ்த‌மிழ்‍=ல் வெளியான‌ இந்த‌ செய்தியை அப்ப‌டியே உங்க‌ள் பார்வைக்கு கொண்டுவ‌ந்திருக்கிறேன்!இந்த‌ குழ‌ந்தைக்கு உத‌வி தேவை எனும் செய்தி,உத‌விட‌ இய‌ன்ற‌வ‌ர்க‌ளை வேக‌மாக‌ சென்ற‌டைய‌ வேன்டும் என்ற‌ நோக்க‌த்தில் ப‌திபித்துள்ளேன். இய‌ன்ற‌வ‌ர்க‌ள் ச‌ம்ப‌ந்த‌ப‌ட்ட‌ முக‌வ‌ரி,தொலைபேசி,ம‌ருத்துவ‌ம‌ணை ஆகிய‌வ‌ற்றினை தொட‌ர்பு கொண்டு விஷ‌ய‌த்தினை உறுதிப‌டுத்திகொண்டு உத‌வும்ப‌டி கேட்டுகொள்கிறோம்.

சென்னை: பிறந்து ஏழு மாதமே ஆன சிறுமிக்கு இருதயத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. அந்தக் குழந்தைக்குத் தேவையான சிகிச்சை பெற வழியில்லாமல் அக்குழந்தையின் பெற்றோர் உதவி கோரி நிற்கின்றனர்.

திருப்பூர், வேலம்பாளையம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களது 7 மாதக் குழநதை ஸ்ரீமதி.அறுவைச் சிகிச்சை மூலம் பிறந்த இந்தக் குழந்தைக்கு பிறந்தவுடனேயே இருதயத்தில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள கே.எம். செரியன் இருதயக் கழகத்தில் குழந்தைக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளின் இறுதியில் அதற்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.ஆனால் இதற்கான செலவை ஈடு கட்ட முடியாத நிலையில் தனசேகரன் தம்பதியினர் உள்ளனர்.

இக்குழந்தைக்கு உதவ முன்வருவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

எஸ்.தனசேகரன்
கதவுஎண் 27, காளியம்மன் கோவில் தெரு,
வேலம்பாளையம்,
திருப்பூர் - 641652

அல்லது

டாக்டர் கே.எம். செரியன்
பிரான்டியர் லைப்லைன் மருத்துவமனை
ஆர் 30 சி அம்பத்தூர் தொழிற்பேட்டை,
சென்னை 600 101.

தொலைபேசி எண்கள் - 044 - 42017575, 26567200

அல்லது

பால தண்டபாணி, dhanush2cbe@yahoo.co.in


க‌ட‌வுள் உள்ள‌மே ! அது க‌ருணை உள்ள‌மே!
க‌ருணை கொண்ட‌ உள்ள‌ம் அது க‌ட‌வுள் இல்ல‌மே!

--------------------------------------------------

ஒரு தாழ்மையான வேண்டுகோள்
இங்க போட வேண்டிய ஓட்டை மணிபாரதியோட இந்தப் பதிவுல போட்டு அந்தப் பதிவை முகப்பிலேயே வைத்திருங்க உதவுங்கள்!

Wednesday, March 17, 2010

வாகனமும் வாசகமும்...

நான் ரசித்த வாகனங்களில் எழுதப்பட்ட வாசகங்கள் சில.....

சாலையைப் பார்த்தால் சமர்த்து... சேலையைப் பார்த்தால் விபத்து
(தோடா... இங்க ஒரு டிராஃபிக் ராமசாமி)

அனைத்து முட்டாள்களும் காதலில் விழுகிறார்கள்.. - அவர்களில் நானும் ஒருவன்.
(இந்த நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு)

சீறி வரும் பாம்பை நம்பினாலும் சிரித்து வரும் பெண்ணை நம்பாதே..!
(ரொம்ப அனுபவம் போல)

கடலில் மூழ்கியவன் முத்தை எடுப்பான்.. காதலில் மூழ்கியவன் பிச்சை எடுப்பான்..!
(பிச்சை எடுத்த காசிலேயே வண்டி வாங்கி இருக்கார்னா பாருங்களேன்)

Thursday, March 11, 2010

நக்கீரனின் விளம்பரமும், பிட்டு பட போஸ்டரும்

நித்யானந்தா கதவைத் திறந்து அம்பலமானாலும் ஆனாரு! ஊடகங்களுக்கு கல்லாக் கட்ட வசதியா போச்சு! அதிலும் குறிப்பா நக்கீரன் இதழுக்கு!

அந்த வீடியோ காட்சிகளைக் கொஞ்சம் கொஜ்சமா ஸ்நாப் எடுத்து வெச்சிகிட்டு வாரா வாரம் பார்ட் பார்ட்டா போட்டு யாவாரம் பார்க்க முடிவெடுத்துட்டங்க போல! சரு புத்தகத்துலதான் போடுறாங்க! போடட்டுமேன்னு விட்டா அதை வேற பெரிசா போஸ்டர் கணக்கா அச்சடிச்சு ஒவ்வொரு பொட்டிக்கடை வாசல்லயும் தொங்க விட்டிருக்காங்க!

யப்பா! கொஞ்சமாச்சும் யோசிக்க வேண்டாமா? நம்ம பொது மக்கள், பரீட்சை எழுதப் போகும் மாணவ மாணவிகள், சிறுவர்கள், குடும்பத்து உறுப்பினர்கள் சாதாரணமா நடந்து/கடந்து போகும் பொது இடங்களிலெல்லாம் இப்படிப்பட்ட போஸ்டரை மாட்டி வெச்சிருக்கீங்களே!

உங்க தெருவுல, உங்க வீட்டு வாசல்ல ஒரு மலையாள பிட்டு பட போஸ்டரை ஒட்டி வெச்சா சகித்துக் கொள்வீர்களா? அல்லது அந்த படத்துக்கான விளம்பரம்னு விட்டு வைப்பீங்களா?

உங்க விளம்பரத்துக்கும், மலையாள பிட்டு பட போஸ்டருக்கும் என்ன வித்தியாசம் இருக்குன்னு நினைக்கிறீங்க?
எனக்குத் தெரிஞ்சி ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கு!
பிட்டு பட போஸ்டர்ல A போட்டு வட்டம் போட்டிருக்கும்! உங்க விளம்பரத்துல அது இல்லை! அவ்வளவுதான்!

சினிமா போஸ்டருக்கு, பலான புத்தகங்களுக்கெல்லாம் ஆர்ப்பாட்டம் செஞ்சி தடை செய்யும் அமைப்புக்கள்/தணிக்கை குழுக்கள் கண்ணுல இந்த போஸ்டரெல்லாம் ஆபாசாமா தெரியலையா? அல்லது இது சட்டப்படி பொது மக்களை எவ்விதத்துலயும் பாதிக்கவில்லைன்னு நினைக்கிறாங்களா? இதை சகிச்சிக்க முடியும் தணிக்கைக் குழுக்கள் சட்டத்தால ஏன் பிட்டு படங்கள் (அவங்களாவது அடல்ட்ஸ் ஒன்லின்னு அறிவிப்பாச்சும் செஞ்சிடறாங்க), பலான புத்தகங்கள் விற்பனையை சகிச்சிக்க முடியலை!

ஓ! பலான புத்தங்க விற்பனை தாராளமா நடந்தா, நக்கீரன் மாதிரி புத்தங்கங்களுக்கு வியாபாரம் படுத்துடும்னு(!?) போட்டியில்லாம வியாபாரம் பண்ண சட்டத்துக்கு/தணிக்கை அமைப்புகளுக்கு ஸ்பெஷல் சம்பளம் தந்துடுறாங்களா?


நக்கீரன் : சமூகப் பொறுப்புள்ள பத்திரிக்கை/இன்வெஸ்கேடிவ் ஜர்னலிசம்ன்னெல்லாம் பேர் வெச்சிகிட்டு ஏன்யா இப்படி மஞ்சள் பத்திரிக்கை வியாபாரம் செய்யுறீங்க?

பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் மீதான மரியாதையை நீங்களேதான் கெடுத்துக்குறீங்க!

ம்ஹூம்! இதுக்கு மேல என்னத்தைச் சொல்ல! இவங்க மேல பொது நல வழக்குப் போட ஏதாச்சும் வழி இருக்கா?

1,2,3,.......9--> 10

11/03/2001
.
.
.
1
.
2
.
3
.
4
.
5
.
6
.
7
.
8
.
9
.
.
ஓவர்!
.
.
.
.
.

10 ஆரம்பம்!

11/03/2010

Wednesday, March 10, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா.....?


ஒரு போயடிக் ரொமாண்டிக் ஸ்டோரின்னு காலேஜ் பசங்களெல்லாம் சொன்னதைக் கேட்டு நேத்து செகண்ட் ஷோ போயிருந்தேன்! சும்மா சொல்லக் கூடாது! காலேஜ் பசங்களெல்லாம் ரொம்பவே சிலாகிச்சித்தான் சொல்லிட்டிருந்தாங்க! அதுவும் ரெண்டு தடவை பார்த்தேன் மூணு தடவை பார்த்தேன்னு வேற என்னோட ஆர்வத்தீயை அதிகமாக்கி வேற விட்டிருந்தாங்க!

படம் போட்டபிறகு பார்த்தா டைட்டிலே அமர்க்களமா இருந்தது! டைட்டிலே கண்ணுக்கு அவ்ளோ அழகு! ஃபோட்டோ கிராஃபி அமர்க்களம்! லொக்கேஷன்ஸும் அருமை! போயடிக்கான படம் என்பதால் இசையும் நல்லா எதிர்பார்க்கலாம்! நம்ம ஏ.ஆர்.ஆர் வேற! பட் எனக்கு அங்கதான் கொஞ்சம் ஏமாற்றம்!

பாடல்களில் மனது லயிக்கும் வண்ணம் பாடல்கள் வரிகளை டாமினேட் செய்யாமல் இசை கூடவே இழையோடி வந்திருக்க வேண்டும் இது போன்ற திரைப்படங்களில்! ஆனால் இங்கே ஏ.ஆர்.ரஹ்மான் கலக்கி இருக்கிறார்! பாடல்கள் வரிகள் முதல் முறை கேட்கும்போது மனதில் பதிய மறுக்கிறது!
கவிஞர் தாமரையின் பாடல்கள். மியூசிக் டாமினேட் செய்யுதே! என்ன செய்ய!

(இந்த விஷயத்தில் இளையராஜா, ஃபாசில் கூட்டணி நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை!)



சிம்பு : நடித்திருக்கிறார்! நிஜமாத்தாங்க! அவரோட பழைய படங்களில் இருந்த துள்ளல், விசுக் விசுக் கென்று காட்டும் விரல் வித்தைகள் மிஸ்ஸிங்க்! நடிப்பு இம்ப்ரூவ் ஆகி இருக்கின்றது! பாரட்டுக்கள்!

விஜய்க்கு ஒரு பூவே உனக்காக போல சிம்புவிற்கு இது திருப்புமுனையாக அமையும் வாய்ப்பு இருக்கிறது!

த்ரிஷா - வழக்கமான துறுதுறுப்பு இல்லாமல் க்யூட் அண்ட் கொயட்டாக வருகிறார்! குடும்பச் சூழ்நிலையைத் தாண்டி காதலுக்காக வெளியே வர இயலாத ஒரு கண்ட்ஸ்ட்ரெயிண்ட் அவருக்கு! செல்ஃப் கண்ஸ்ட்ரெயிண்ட்தான்! ஆனாலும் அதையும் மீறி அவருக்குள்ளும் காதல் தோன்றுகிறது!
கண்களுக்குள் காதலை வைத்துக் கொண்டு அதை வெளியே தெரியாமல் மறைக்கப் படாதபாடு படுகிறார்!

ஆனாலும் சிம்புவுக்கு பார்த்தவுடனே அவரோட மனசுல காதல் தோன்றி, அவரைப் போட்டுத்தாக்கும் அளவுக்கு.... ம்ஹூம் அந்த அளவுக்கு இல்லை. ஜஸ்ட் கியூட் அவ்வளவுதான்! (ஒரு வேளை இளவட்டப் பசங்களுக்கு மனசுல புகுந்து குத்தாட்டம் போடுமோ என்னவோ)
அல்லது சிம்புவோட கண்கள் வழியா பார்க்கணுமோ!

த்ரிஷாவை விரட்டி விரட்டி லவ்வும் சிம்புவும், ஆரம்பத்தில் காதலில் விழுந்தாலும் அதைக் கடைசியில் கை கழுவும் த்ரிஷாவும் என செல்கிறது கதை!

இன்னும் எத்தனை படத்துலதான் பெண்ணின் தகப்பனார்கள் தன் பிணத்தைப் பார்த்துட்டு அந்தப் பையனை கல்யாணம் பண்ணிக்கோன்னு பிளாக் மெயில் பண்ணுவாங்களோ! மாப்பிள்ளைன்னு வந்தாலே ஃபாரின்லே வேலை செய்யுற மாப்பிள்ளைகள் வருவாங்களோ!

நல்ல நல்ல லொக்கேஷன்ஸ்! அருமையான ஃபோட்டோகிராஃபி!

பாடகளில் கதையோடு பொருந்தாத வெளிநாட்டு வாலிபர்கள்/வாலிபிகள் கூட நடனமாடுகிறார்கள்! ஒரு பாட்டில் என்றால் ஓக்கே! எல்லாப் பாடல்களிலுமா?

திரைக்கதை, கிளைமாக்ஸ் எல்லாம் ஓக்கே!

இளவட்டப் பசங்களுக்கு, காதலிக்க ஃபிகர் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, காதலித்து முடித்தவர்களுக்கு..... திரும்பத் திரும்பப் பார்த்து ஃபீல் ஆகிக் கொள்ள வைக்கும் படம்!

விண்ணைத் தாண்டி வருவாயா? - எ நைஸ் ஃபீலிங்க்ஸ்!

Friday, March 05, 2010

சுஜாதா அறக்கட்டளை-உயிர்மை இணைந்து வழங்கும் சுஜாதா நினைவு விருதுகள்

தமிழ் மொழியின் நவீனத்துவத்திற்கு பெரும் பங்காற்றிய அமரர் சுஜாதாவின் நினைவாக அவரது பிறந்த தினமான மே 3 ஆம் தேதி இலக்கியம் மற்றும் இணையம் சார்ந்து 6 விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. ஒவ்வொரு விருதும் 10 ஆயிரம் ரூபாய் பரிசும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது.

1. சுஜாதா சிறுகதை விருது: சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கு

2. சுஜாதா நாவல் விருது: சிறந்த நாவலுக்கு

3. சுஜாதா கவிதை விருது: சிறந்த கவிதைத் தொகுப்பிற்கு

4. சுஜாதா உரைநடை விருது: சிறந்த கட்டுரைத் தொகுப்பிற்கு

5. சுஜாதா இணைய விருது: சிறந்த வலைப்பதிவு(blog) அல்லது இணைய தளத்திற்கு(web site)

6. சுஜாதா சிற்றிதழ் விருது: சிறந்த சிறுபத்திரிகைக்கு

விதிமுறைகள்

1. முதல் நான்கு பிரிவுகளில் 2008-2009 ஆண்டு வெளிவந்த நூல்களில் 2 பிரதிகள் அனுப்பப்படவேண்டும். எழுத்தாளரோ பதிப்பாளரோ, அல்லது வாசகர்களோகூட நூல்களை அனுப்பலாம். எழுத்தாளரைப்பற்றிய தகவல்கள் மற்றும் முகவரி தனித்தாளில் எழுதி நூல்களுடன் அனுப்பவும். நூல்களில் எதுவும் குறிக்கப்படவேண்டியதில்லை.

2. 5 ஆவது பிரிவில் தமிழின் சிறந்த வலைப்பதிவு அல்லது இணையதளத்திற்கு வழங்கப்படும். அந்த இணைய தளத்தை அல்லது வலைப்பதிவை நடத்துபவர்கள் தம்மையும் தமது இணைய பக்கங்களையும் பற்றிய சிறு குறிப்புடன் அதில் வெளிவந்த முக்கியமான ஆக்கங்களின் பத்து சுட்டி(link)களையும் அனுப்பவேண்டும். அனுப்பவேண்டிய முகவரி: sujathaawards@gmail.com

3. 6 ஆவது பிரிவில் தமிழில் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த சிற்றிதழ்களிலிருந்து பிரதிகள் அனுப்பப்படவேண்டும். அந்த ஆண்டில் குறைந்த பட்சம் மூன்று இதழ்களாவது வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அந்த ஆண்டில் வெளிவந்த ஒவ்வொரு இதழிலிருந்தும் ஒரு பிரதி வீதம் அனுப்பினால் போதுமானது.

4. விருதுக்குரிய தேர்வுகள் தமிழின் முண்ணனி எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களால் மேற்கொள்ளப்படும். தேர்வு முறை குறித்த தகவல்கள் பகிரங்கமாக வெளியிடப்படும்.

5. தேர்வுக்கான விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: மார்ச் 31, 2010

6. விருதுகள் மே. 3, 2010ஆந்தேதி சுஜாதாவின் பிறந்த தினத்தில் வழங்கப்படும்

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய முகவரி:

சுஜாதா விருதுகள், உயிர்மை,11/29 சுப்பிரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை-600018,

மின்னஞ்சல்:sujathaawards@gmail.com தொலைபேசி:91-44-24993448

Free Website Hosting