BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Sunday, November 01, 2009

காலம் உங்கள் காலடியில்


நூல் : காலம் உங்கள் காலடியில்

ஆசிரியர் : சோம.வள்ளியப்பன்

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

விலை: ரூ 80


"நமது லட்சியமும் உழைப்பும் எத்தனை சிறப்பானவையாக இருந்தாலும் வெற்றியின்ன் சூட்சுமம், நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் ஒளிந்திருக்கிறது"என ஆசிரியரின் அறிமுகத்தோடு ஆரம்பமாகிறது இந்நூல்!


மனிதவளம், மூலப்பொருள்கள் போன்றே நேரம் என்பதும் ஒரு வளம்தான்! ஆனால் இழப்பீடு செய்யமுடியாத வளம்! "TIME AND TIDE WAIT FOR NO MAN"என்பார்களே, அந்த TIME என்னும் நேரத்தை எப்படிச் சேமித்து அந்த வளத்தைப் பயனுள்ள முதலீடாக மாற்ற வேண்டும் என்பதையும், அப்படிச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அசத்தலாகச் சொல்லி இருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்!


நியூ செஞ்சுரி புத்தகக் கண்காட்சியில் இந்நூலைப் பார்த்ததுமே கவர்ந்ததால் கையிலெடுத்துக் கொண்டேன்! பக்கங்களைப் புரட்டவும், "ஆஹா!இது நமக்கு மிகவும் அவசியப்படுமே" என்று வாங்கிவந்த கையோடு ஒரு மணி நேரத்தில் படித்தேமுடித்தேன்! பக்கங்களைப் புரட்டப் புரட்ட இதைப் படிக்கச் செலவழிக்கும் இந்த ஒரு மணி நேரமே என்னுடைய பயனுள்ள முதல் முதலீடாக இருக்கும் என்ற எண்ணத்தை இந்நூல் ஏற்படுத்தத் தவறவில்லை!


உண்மையிலே TIME MANAGEMENT என்னும் விஷயத்தில் நாம் எவ்வளவு அசிரத்தையாக இருக்கிறோம் என்பதை எளிய உதாரணங்கள் மூலம் அழகாக விளக்கப் பட்டிருக்கிறது! ஒரு நாளின் திரும்பக் கிடைக்காத எத்தனை மணித்துளிகளை வீணாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை நன்கு உணர்த்துகிறது!


மேலும் நாம் பயன்படுத்தும் நேரம் எத்தகைய முறையில் வீணாகிறது/பயனளிக்கிறது என்று நமக்கு நாமே சுயபரிசோதனைகள் மூலம் அறிந்து வீணாகச் செலவழிக்கும் நேரங்களைக் கண்டுணர்ந்து கொள்ள சில எளிய அட்டவணைகளையும் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் கொடுத்துள்ளார்!


ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்கான முன் தயாரிப்பு முதல்கொண்டு எவ்வாறு வீண் தாமங்களைத் தவிர்த்து நேரத்தை எவ்வாறு சேமிக்கலாம் என்று கூறியுள்ளார்!


EFFICIENCY, EFFECTIVENSS பொன்றவை பற்றியும், அவற்றிற்கிடையேயான வித்தியாசம் என்ன? எஃபெக்டிவ்னஸாக செய்வதால் எவ்வாறு நேரம் உபரியாகக் கிடைக்கிறது.... இப்படி எத்தனையோ விஷயங்கள் அழகாக, எ ளிமையாக அருமையாகச் சொல்லப் பட்டிருக்கிறது!


படித்துமுடிக்கும் வரை கூட பொறுமை இல்லாமல் உடனடியாக ஒரு எக்ஸெல் கோப்பைத் திறந்து இனி நாமும் தினத்தோறும் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு, திட்டமிட்டு வேலை செய்து நேரத்தைச் சேமிக்க முடிவெடுத்துவிட்டேன்!




Free Website Hosting