BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Thursday, October 22, 2009

மாஸ்டர்(!?) கணேஷ் - ஆர்த்தி : திருமணம் : அக்டோபர் 23

அக்டோபர் 23 அன்று குருவாயூரில் திருமணம் செய்துகொள்ளவிருக்கும்
சின்னத்திரை காமெடி பிரபலங்களான மாஸ்டர்(!?) கணேஷ் மற்றும் ஆர்த்தி ஆகியோருக்கு வாழ்த்துக்கள்!

Monday, October 05, 2009

திரைவிமர்சனம் : எந்திரன்- தி ரோபோ

படம் வரும் வரும்னு எத்தினி நாளுக்குத்தான் தேவுடு காக்குறது! அதான்! இப்பவே எழுதி வெச்சிட்டேன்! படம் ரிலீசான பிறகும் படிச்சா ஒண்ணியும் பெரிசா வித்தியாசமும் இருக்க்கப்போறதில்லை!

ரோபோ- இயந்திர மனிதன் என்கிற பொருளில் படத்தின் தலைப்பு இருப்பதால் படம் முழுக்க ஒரு ரோபோ (ஜட்ஜ்மெண்ட் ஆர்னால்டு போல ரோபாகவே வருவார் என்றோ அல்லது "என் இனிய இனியந்திரா" தொடரில் வருவது போல சில காட்சிகளுக்காவது "நான் ரனினி நீ ஐஸ்வர்யா, நான் ரஜினி நீ ஐஸ்வர்யா" என்றெல்லாம் தத்துப்பித்தென்று டயலாக் பேசிக்கொண்டோ வருவார் என்றெல்லாம் எதிர்பார்த்து தியேட்டரிலோ/அல்லது திருட்டு டிவிடொ பிளேயர் முன்பொ அமர்ந்திருந்தீர்கள் என்றால் ஐ யாம் வெரி ஸாரு டூ ஸே! அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை!

தமிழ்ச்சினிமா மசாலா டிரெயிலர் கலாச்சாரத்தில் இருந்து சற்றும் விலகாத இன்னுமொரு காஸ்மெடிக் மசாலதான் இதுவும்! டியெடிலர் காட்சிகளில் காண்பிக்கப்படும் பரபரப்பான காட்சிகள் படம் முழுக்க வியாபித்திருக்கும் என்று நினைத்துப் போனால் அந்த டியெயிலர் காட்சிகளிலேயெ இரண்டு படத்தின் நீளம் கருதி கத்தரிக்கப் பட்டிருக்கக் கூடும்!

ஒரு சோத்துக்கு ஒண்ணே முக்கால் பானை பதம் - என்பதே தமிழ்ச்சினிமா விளம்பர யுக்தி! இதே யுக்திதான் ரோபோவும்!

ரோபோ எனப்படும் அரதப் பழசான(இந்தப் படம் ரிலீஸாக்கியிருக்கும் நேரம் என் அண்ணன் மகன் அழகர் கார்த்திக் கூட இந்த டெக்னாலஜியை அரதப் பழசு என்றுதான் சொல்லக் கூடும், இப்போ அவனுக்கு வயசு டிசம்பர் வந்தா 1) இயந்திர மனிதன் கெட் அப் பை மாட்டிக்கொண்டு ஓரிரண்டு காட்சிகளில் வந்து போகிறார். கந்தசாமியில் கோழி வேஷம் போட்ட சீயான் மாதிரி! விளம்பரப் படங்களை பார்த்து நாம் ஏதோ வித்தியாசமான கெட் அப் என்று நம்பி போயி உட்கார்ந்தோம் அல்லவா! அதே கதைதான் இங்கேயும்!

சங்கர் சார்: ரொபாடிக் எஞ்சினியரிங்க் இப்ப ஒண்ணாம் வகுப்பு சிலபஸ்லயே வரப் போகுதாம். பசங்களுக்கு உங்க படத்தை பார்த்தா காமெடியா இருக்கப் போகுது! பசங்க கூட டெக்லாலஜிக்கல் லாஜிக் ஓட்டைகளை விமர்சிக்கப் போகிறார்கள்! என்ன செய்யப் போறீங்களோ? :(


படம் பிரம்மாண்டம் என்று சொல்லப்(விளம்பரப்படுத்தப்)படும் இன்னொரு காரணம் : கதாநாயகி : முன்னால் உலக அழகி ஐஸ்வர்யா ராய்!

நடனக் காட்சிகளில் நளினம். ஜீன்ஸ் போலவே! அதையெ எல்லாப் படத்திலும் பார்த்துகிட்டிருக்க முடியுமா? வித்தியாசமா வில்லி ரோல் கொடுத்தப்ப வேணாம்னுட்டீங்க! அதுக்குப் பழிவாங்கிட்டாங்க பார்த்தீங்களா? உங்களுக்கும் இந்தப் படத்துல ஈக்வெல் ரோல்னு வேற சொன்னாங்க! அதுக்காக தன்னோட ரோல் லெவலை தலைவர் இவ்ளோ மட்டமா குறைச்சிக்குவாருன்னு எதிர்பார்க்கவே இல்லை! உங்களுக்குப் பதிலா ஏதாச்சும் ஒரு மொக்கக துணை நடிகையைப் போட்டிருந்தாலும் ஒண்ணும் வித்தியாசம் இருந்திருக்கப் போறதில்லைன்னு உங்களுக்கு நெசமாவெ புரியலயா தாயி?

ஐஸ்வர்யாவேதான் ஜோடியா வேணும்னு அவங்க கால் ஷீட்டுக்காக்வே காத்திருந்து இப்படியொரு மொக்கை அவசியமா தலவரே! பொண்ணு பொருள் புகழ் இதெல்லாம் நம்ம பின்னாடி வரும்னு எப்பவோ சொன்னீங்களே தலைவா! ஓ! அதெல்லாம் டயலாக்கா! நீங்களா சொன்னதில்லையா! அப்ப சரி!


கதை : என்னாது கதையா? டைரக்டர் அடிக்க வருவாரே! தலைவர் படத்துல வேற என்னங்க எதிர்பார்க்குறீங்க! நாட்டுக்கு நல்ல செய்யற தலைவர்! விஞ்ஞான விபரீங்களை நிகழ்த்தி பணம் பண்ண நினைக்கிற வில்லன்! அவனை நல்ல விதமா திருத்த நினைச்சி வீதிக்கு வந்துடறாரு! ஒரே பாட்டுல எல்லாட் டெக்னாலஜியும் கத்துகிட்டு வில்லனோட ரூட்லயே களத்துல குதிக்கிறாரு! நடுவுல வில்லனோட மாமன் மகள் ஐஸ்வர்யா கூட காதல்! வெளிநாடெல்லாம் போயி டூயட் பாடி புரொடியூசர் வயித்துல கொஞ்சம் புளியயக் கரைச்சிட்டு திரும்ப வந்து வில்லனோட மோதுறாரு!

பாடல்கள்: வைரமுத்து & பா.விஜய்!
கேக்க இனிமையான பாடல்களா இருந்திருக்க வேண்டியது! சங்கர் & ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியாச்சே! பிரம்மாண்டம்னு சொல்லி பின்னியெடுத்திருக்காங்க! பாடல்கள் புரியணும்னா கையோட ஒரு டிக்ஷனரியும் கொண்டு போங்க!

பாவம் வைரமுத்து! பா.விஜய் தற்கால லௌகீகங்கள் புரிஞ்சவர்! சோ நோ வரீஸ்!


நடனம்: ராஜூ சுந்தரம், அதிக வேலையில்லை இவருக்கு! தலைவர் படத்துல டான்ஸா? ஹே ஹே ஹெஹெஹேஹே!


சண்டைப் பயிற்சி : யூயேன் வூ பிங், பேரைச் சொல்றதே சண்டை போடுற மாதிரி இருக்குல்ல! படத்துலயும் அம்புட்டுத்தான்! தலைவருக்குத்தான் இதெல்லாம் சரிப்பட்டு வரதில்லையே! அப்புறம் ஏன் இந்த காமெடி?

ஒளிப்பதிவு ஓகே! சவுண்ட் & சயிண்டிஃபிக் எஃபெக்ட்ஸ் என்ற பெயரில் இம்சையைக் கூட்டி இருக்கிறார்கள்! என்ன கொடுமை சார் இது! நாங்க பாவம்! அழுதுடுவோம்!
காஸ்ட்யூம் டிசைன் : இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்காலம்! ஆங்கில படங்கள் அல்லது ரொபாடிக் எஞ்சினியரிங்க் ஸ்டூடண்ட்ஸ்கிட்டே கேட்டிருக்கலாம்! அட இரும்பு மனிதன் ஆர்ச்சி காமிக்ஸெல்லாம் ரெஃபர் பண்னியிருக்கலாம்! அனிமேஷன்ஸெல்லாம் இப்பொ கார்டூன் நெட்வர்க்லயே நல்லா இருக்கு! அதைவிடவே இதெல்லாம்..............!
என்னவோ போங்க! நிறைய எதிர்பார்த்து போனா காலி பெருங்காய டப்பாதான்! மத்தபடி குழந்தைகளை கூட்டிட்டு பொயி பூச்சாண்டி காட்டலாம்! வெளி உலகம் தெரியாத தாய்மர்ர்களுக்கு வித்தியாசமான ஒரு சப்ஜெக்ட்! ஆனா பிடிக்குமே என்பது பில்லியன் டாலர் கேள்விக்குறி?

Friday, October 02, 2009

கருமமா, கவிதையா.. உங்கள் சாய்ஸ்!

எப்பவாவது எட்டிப்பார்த்து
கவிதைன்னு நினைச்சுவந்து
கருமத்தையா படிச்சிட்டோம்னு
கவலைப் பட்ட
நண்பனுக்கு!

எப்படியெல்லாம் எழுதிவெச்சா
கவிதைன்னு ஒத்துக்குவே
ரூல்ஸு புக்கு இருந்ததுன்னா
அனுப்பிவைப்பா ராசா எனக்கு!

வரி ஒண்ணுக்கு
ரெண்டு வார்த்தை
மடக்கி எழுத
கவிதை வரும்
எனக்கு தெரிஞ்ச
இலக்கணத்தில்
எழுதிப் பிழைப்பை
ஓட்டி வந்தேன்!

கவிதைன்னு எழுதறதெல்லாம்
கருமம்னு சொல்லிப்புட்டா
நாங்க அதை
ஒத்துக்கணுமா?
நம்மலால முடியாது ராசா!

என்னவெல்லாம்
எப்பவெல்லாம்
எழுதணும்னு
எனக்குத் தெரியும்!

உம்ம எழுத்து
எப்பவெல்லாம்னு
முடிவு பண்ண
உனக்கு உரிமையிருக்கு!

எங்க எழுத்து
எப்பன்னெல்லாம்
நாங்களே பார்த்துக்குறோம்!
உனக்கெதுக்கு
ராசா வீண் சிரமம்?

நாங்க எழுதுறதுதான் கவிதை!
நாங்க எழுதுறதுதான் கவுஜை!
நாங்க எழுதுறதுதான் கட்டுரை!
நாங்க எழுதுறதுதான் கதை!
நாங்க எழுதுறதுதான் அரசியல்!

எதை வேணும்னாலும்
எப்ப வேணும்னாலும்
எப்படி வேணும்னாலும்
எழுதிகிட்டேதான் இருப்போம்!

மத்தவங்க சர்டிஃபிகேட்
எங்களுக்கு தேவையில்லை!
எங்களோட சர்டிஃபிகேட்
உங்களுக்கு எதுவுமில்லை!


புரியாதவங்க இங்கன போயி பாருங்க