எப்பவாவது எட்டிப்பார்த்து
கவிதைன்னு நினைச்சுவந்து
கருமத்தையா படிச்சிட்டோம்னு
கவலைப் பட்ட
நண்பனுக்கு!
எப்படியெல்லாம் எழுதிவெச்சா
கவிதைன்னு ஒத்துக்குவே
ரூல்ஸு புக்கு இருந்ததுன்னா
அனுப்பிவைப்பா ராசா எனக்கு!
வரி ஒண்ணுக்கு
ரெண்டு வார்த்தை
மடக்கி எழுத
கவிதை வரும்
எனக்கு தெரிஞ்ச
இலக்கணத்தில்
எழுதிப் பிழைப்பை
ஓட்டி வந்தேன்!
கவிதைன்னு எழுதறதெல்லாம்
கருமம்னு சொல்லிப்புட்டா
நாங்க அதை
ஒத்துக்கணுமா?
நம்மலால முடியாது ராசா!
என்னவெல்லாம்
எப்பவெல்லாம்
எழுதணும்னு
எனக்குத் தெரியும்!
உம்ம எழுத்து
எப்பவெல்லாம்னு
முடிவு பண்ண
உனக்கு உரிமையிருக்கு!
எங்க எழுத்து
எப்பன்னெல்லாம்
நாங்களே பார்த்துக்குறோம்!
உனக்கெதுக்கு
ராசா வீண் சிரமம்?
நாங்க எழுதுறதுதான் கவிதை!
நாங்க எழுதுறதுதான் கவுஜை!
நாங்க எழுதுறதுதான் கட்டுரை!
நாங்க எழுதுறதுதான் கதை!
நாங்க எழுதுறதுதான் அரசியல்!
எதை வேணும்னாலும்
எப்ப வேணும்னாலும்
எப்படி வேணும்னாலும்
எழுதிகிட்டேதான் இருப்போம்!
மத்தவங்க சர்டிஃபிகேட்
எங்களுக்கு தேவையில்லை!
எங்களோட சர்டிஃபிகேட்
உங்களுக்கு எதுவுமில்லை!
புரியாதவங்க இங்கன போயி பாருங்க
Friday, October 02, 2009
கருமமா, கவிதையா.. உங்கள் சாய்ஸ்!
பிதற்றியவர் நாமக்கல் சிபி at Friday, October 02, 2009
வகை : எதிர்கவுஜை
Subscribe to:
Post Comments (Atom)
37 பின்னூட்டங்கள்:
தள உங்களுக்கு பிபி இருக்கா?
//தள உங்களுக்கு பிபி இருக்கா?//
நமக்கெல்லாம் அது வராது!
//மின்னுது மின்னல் said...
தள உங்களுக்கு பிபி இருக்கா?//
அப்ப சுகர் கண்டிப்பா வந்துரும் :))
//அப்ப சுகர் கண்டிப்பா வந்துரும் :))//
ஹெஹெ!
நாங்க எழுதுறதுதான் கவிதை!
நாங்க எழுதுறதுதான் கவுஜை!
நாங்க எழுதுறதுதான் கட்டுரை!
நாங்க எழுதுறதுதான் கதை!
நாங்க எழுதுறதுதான் அரசியல்!
//
அப்படினு லக்கி நீங்களா நினைச்சிகிட்டிங்கண்ணா.. :)
நாங்க எழுதுறதும்தான் கவிதை!
நாங்க எழுதுறதும்தான் கவுஜை!
நாங்க எழுதுறதும்தான் கட்டுரை!
நாங்க எழுதுறதும்தான் கதை!
நாங்க எழுதுறதும்தான் அரசியல்!
இப்படி நினைக்கனும் :)
//நாங்க எழுதுறதுதான் கவிதை!
நாங்க எழுதுறதுதான் கவுஜை!
நாங்க எழுதுறதுதான் கட்டுரை!
நாங்க எழுதுறதுதான் கதை!
நாங்க எழுதுறதுதான் அரசியல்!/
இன்னும் கூட பின்னூட்டம்,மொக்கை,கும்மி etc சேர்த்திருக்கலாம் தள :)))
அப்ப உங்களுக்க கண்டிப்ப ”கல்”லு நெஞ்சமா தான் இருக்கனு(மே)ம் ;)
//அப்படினு லக்கி நீங்களா நினைச்சிகிட்டிங்கண்ணா.. :)//
இதுல அந்த பச்சப்புள்ளைய ஏன்யா இழுக்குறீங்க?
//அப்ப உங்களுக்க கண்டிப்ப ”கல்”லு நெஞ்சமா தான் இருக்கனு(மே)ம் ;)//
கல்லு வேணா இருந்தது!
சேலத்துலதான் ஒரு டாக்டர்க்கு காண்ட்ராக்ட் கொடுத்து உடைச்சேன்!
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தங்
கவிதையே ச்சே கருமமே கட்டளைக் கல்!
இணைய போலீஸ் அப்டிங்கற பொறுப்புணர்ச்சி உங்க எதிர் வினைல தெரியுது தள.. உங்களயும் உ.த அண்ணனையும் விட்டா இதெல்லாம் கேக்க யாரு இருக்கா?
சேலத்துலதான் ஒரு டாக்டர்க்கு காண்ட்ராக்ட் கொடுத்து உடைச்சேன்!
//
நீங்க முட்டைகோஸையும் தக்காளி சட்னியையும் திருட்டுதனமா சாப்பிடும் போதே
அதெல்லாம் எங்களுக்கு தெரியும் தள
:)
எங்களோட சர்டிஃபிகேட்
உங்களுக்கு எதுவுமில்லை!
//
அதெப்படி டாக்டருக்கு படிக்காம எப்படி டாக்டர் ஆகமுடியாதோ அது மாதிரி
கவிதை எழுத தனியா..
கதை எழுத தனியா..
அரசியல் எழுத தனியா...
சர்டிஃபிகேட் அவசியம்
இல்லைனா இது சைபர் குற்றம் நீங்கெல்லாம் போலிகள்
இதுல அந்த பச்சப்புள்ளைய ஏன்யா இழுக்குறீங்க?
//
நாலு பேரை இழுத்து விட்டாதான் தமிழ்மணம் இந்த வாரம் பரபரப்பா ஓடும்
:)
இந்த கவுஜைக்கு அதிமுக வுல அங்கீகாரம் கொடுக்க முடியாது.
அதிமுக - அங்கீகாரம் மற்றும் திருத்தங்கள் முன்னேற்ற கழகம்
நயந்தாரா ரசிகர் பேரவை said...
//
ரசிகர் மன்றத்தை கலச்சிடுங்கய்யா பாவம் அந்த புள்ள எங்கயாவது நல்லா இருக்கட்டும்
//நாங்க எழுதுறதுதான் கவிதை!
நாங்க எழுதுறதுதான் கவுஜை!
நாங்க எழுதுறதுதான் கட்டுரை!
நாங்க எழுதுறதுதான் கதை!
நாங்க எழுதுறதுதான் அரசியல்!//
அப்படிப் போடுங்கய்யா திருப்பாச்சி அருவாள...
பித்ஸ், அப்படியே இதையும் சேர்த்துக்கோங்க...
நாங்க எழுதுறதுதான் கவிஜா ;-)
பித்ஸ், அப்படியே இதையும் சேர்த்துக்கோங்க...
நாங்க எழுதுறதுதான் கவிஜா ;-)
//
நல்ல இன்ஃப்ர்மேஷன் ம் மேல சொல்லுங்க !
:)
கட்டையில போன கொரலும்
நமக்கில்ல ஓங்கியெடுத்து
ஒப்பாரி வைக்க
இருக்கிற குரலாலே கூவிவைப்போம்
முடிஞ்சா படி முடியாட்டி
பொத்திக்கோ..........
உம்மோட ஜட்டி கதைக்கு
எம்மூட்டு எதில குறைச்சல்
ஃப்ரீய கிடைச்சாக்க ஃபினாயிலும்
குடிப்பியாம்லே........
குவார்ட்டர் அடிச்சு குப்புற
கவுந்ததை வளைச்சு வளைச்சு
எழுதினாக்க புண்ணுநவீனமுனு
புதுசா சொல்லுதீய
எங்களுக்கில்ல தெரியும்
அதுவும் ஒரு எழுத்தான்னு.......
எப்பவாவது எட்டிப்பார்த்து
கவிதைன்னு நினைச்சுவந்து
கருமத்தையா படிச்சிட்டோம்னு
கவலைப் பட்ட
நண்பனுக்கு!
//
யாரு அந்த அப்பாவி
ஐயராத்துல வந்து ஆட்டு கறி கேட்டது..?
உம்மோட ஜட்டி கதைக்கு
எம்மூட்டு எதில குறைச்சல்
ஃப்ரீய கிடைச்சாக்க ஃபினாயிலும்
குடிப்பியாம்லே........
//
ஆஹா கோணார் நோட்ஸே தோத்துடும் போல தெரியுதே
பின்னிட்டிங்க தெளிவுரை
வரி ஒண்ணுக்கு
ரெண்டு வார்த்தை
மடக்கி எழுத
கவிதை வரும்
எனக்கு தெரிஞ்ச
இலக்கணத்தில்
எழுதிப் பிழைப்பை
ஓட்டி வந்தேன்!
//
இதை கூட கவிதையா சொல்லுற பாரு இங்கதாய்யா நீ ஃப்புரூப் பண்ணுற நீ கவிஜ சக்கரவத்தினு :)
தல..
அடுத்த இன்னிங்ஸா..
//
மத்தவங்க சர்டிஃபிகேட்
எங்களுக்கு தேவையில்லை!
எங்களோட சர்டிஃபிகேட்
உங்களுக்கு எதுவுமில்லை!
//
இந்த எதிர் கவுஜயே அவருக்கான உங்களின் சர்டிபிகேட் தானோன்னு தோணுதே தல..
சொந்த செலவில் சூவில் சுண்ணாம்பு தடவியவர்களுக்கு நன்றிகள்
தல செருப்பால அடிச்ச மாதிரி சொல்லிட்டீங்க.....
அவன் அவனுக்கு என்ன தோணுதோ அத அவன் எழுதுறான் இதுல இவருக்கு மட்டும் என்னா கோவம்....
இந்த பெரிய அறிவு ஜீவியோட சர்டிஃபிகேட் நமக்கு ஒண்ணும் தேவையில்ல..சிபி சார் பின்னிட்டீங்க
பின்னூட்டம் கூட ஆபாசமா போடுறவகளுக்கு பதிவெழுதுற தகுதியும் இல்லை
மாநக்கலு..
கவிதையை வெகுவாக ரசித்தேன்..
வரிக்கு வரி படித்து மகிழ்ந்தேன்..
பதிலுக்கு நானும் இதேபோல் எழுதலாம் என்று நினைத்தேன்.
உனக்கு பி.பி. வராது என்று நீயே நம்புவதால் போனால், போகிறாய்.. பிழைத்துப் போ என்பதால் விட்டுவிடுகிறேன்..
உமது கடைக்கண் பார்வை எப்போதும் என் மீது உண்டு என்பதை நினைக்கும்போதே எனக்கு மிட்டாய் சாப்பிடாமலேயே ரத்தத்தில் சுகர் ஏறுகிறது முருகா..!
புரிதலுக்கு மிக்க நன்றி.. நன்றி.. நன்றி..!
ஹா ஹா ஹா. கவிதை.. கவிதை.. :)
நக்கல்னா நக்கல் உலக மகா நக்கல் சாமியோவ்..
நாமக்கல் சிபி said...
//தள உங்களுக்கு பிபி இருக்கா?//
நமக்கெல்லாம் அது வராது!
ஆமாம் தலை அதெல்லாம் நமக்கு தான் வரவைப்பார்...
ஆயில்யன் said...
//மின்னுது மின்னல் said...
தள உங்களுக்கு பிபி இருக்கா?//
அப்ப சுகர் கண்டிப்பா வந்துரும் :))
ஆமாம் நமக்கும் வரும் ஏன்னா அவர் இனிமையான மனிதர் என்று நட்பு வட்டத்தில் பேச்சு....
நாங்க எழுதுறதுதான் கவிதை!
நாங்க எழுதுறதுதான் கவுஜை!
நாங்க எழுதுறதுதான் கட்டுரை!
நாங்க எழுதுறதுதான் கதை!
நாங்க எழுதுறதுதான் அரசியல்!
எதை வேணும்னாலும்
எப்ப வேணும்னாலும்
எப்படி வேணும்னாலும்
எழுதிகிட்டேதான் இருப்போம்!
அது ஏன்னா நான் கூட இதான பண்ணிட்டு இருக்கேன்,,,தல சொன்ன சரியாத் தான் இருக்கும்....
வரி ஒண்ணுக்கு
ரெண்டு வார்த்தை
மடக்கி எழுத
கவிதை வரும்
எனக்கு தெரிஞ்ச
இலக்கணத்தில்
எழுதிப் பிழைப்பை
ஓட்டி வந்தேன்!
ஐய்யய்யோ என்னைப் பத்தி ரகசியம் உங்களுக்கும் தெரிஞ்சி போச்சா?
//வரி ஒண்ணுக்கு
ரெண்டு வார்த்தை
மடக்கி எழுத
கவிதை வரும்
எனக்கு தெரிஞ்ச
இலக்கணத்தில்
எழுதிப் பிழைப்பை
ஓட்டி வந்தேன்!
//
என்ன கொடுமைங்க இது? அட்லீஸ்ட் இதுலையாவது ரெண்டு வார்த்தை வர மாதிரி எழுதியிருந்தா, கவிதைன்னு ஒத்துக்கினுருப்பேன்.
இது கருமம் தான்.
"இலக்கணத்தில்" இதுக்கு பதிலா ரெண்டு வார்த்தை வந்திருக்கணும்.
அட்லீஸ்ட், "இலக் கணத்தில்"னாவது வந்திருக்கணும்.
இன்னும் நீங்க போக வேண்டிய தூரம் ரொம்ப இருக்கு
:)
கவிதை..? இப்படியும் எழுதலாமா
முயற்சி செய்து பார்த்துவிடவேண்டியதுதான்.. நம்ம மக்கள் இருக்குறவரைக்கும் பயமேது
Kanna, your "POEM" also tough like Leena Manimehalai's poem...Long before you were a good chotta .Why you too became L.M ?kanna, kovichikkathe
Post a Comment