BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Saturday, December 05, 2009

பதிவர்கள், வாசகர்கள் சங்கமம் - ஈரோடு


கண்ணுக்குத் தெரியாத மின் காந்த அலைகளினூடாக பின்னப்பட்ட வலைத்தளம் இணைத்து வைத்த உறவுகளை பெரும்பாலும் வாசிப்பிலும், பின்னூட்டங்களிலும் சில சமயம் பேச்சிலும், மின் உரையாடலிலும் மட்டுமே சந்திக்க முடிகிறது

இதோ...
ஒரு வாய்ப்பு கைகூடி வருகிறது... ஒருவருக்கொருவர் கரம் குலுக்கி, விழிகளை உற்று நோக்கி, “அட நீங்களா அவரு” என ஆச்சரியங்களைச் சுமக்க...

நீண்ட நாளாய் மனதில் மிதந்த கனவு. பல தளங்களில் மிக அற்புதமாக தங்கள் எண்ணங்களைப் படைத்து வரும் படைப்பாளிகளைச் சந்தித்து உரையாட...

ஈரோட்டில் பதிவர் சந்திப்பு நடத்தலாம் என்ற எண்ணத்தை போன பகிர்தலில் வெளிப்படுத்தியதையொட்டி வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் இருக்கும் பதிவர்கள் தங்கள் விடுமுறையை இதற்கு ஏற்ப மாற்றியமைத்து கலந்து கொள்வதாக மின் உரையாடலில் கூறியது பெருமகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.

20.12.2009 ஞாயிறு மாலை ஒரு மூன்று மணி நேரம் ஈரோட்டில் பதிவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் சங்கமமாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். அனைவரும் எளிதில் கலந்து கொள்ளும் வகையில் ஞாயிறு மாலை 3 மணி அல்லது 4 மணிக்குத் துவங்கி மாலை 7 மணிக்குள் முடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம்.

சங்கமம் நடக்கும் இடத்தை எத்தனை பேர் கலந்து கொள்கிறீர்கள் என்பதை அடிப்படையாக வைத்து 15ம் தேதி அறிவிக்கிறோம். இடம் நகரத்தின் மையத்திலோ அல்லது இயற்கை சூழ்ந்த சூழலிலோ இருக்கும்.

தயவுசெய்து பதிவர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் தங்கள் வருகையை முன் கூட்டியே எங்களில் யாரிடமாவது உறுதி செய்துகொள்ளவும்.
வால்பையன் 99945-00540
ஈரோடு கதிர் 98427-86026
ஆரூரன் 98947-17185
பாலாசி 90037-05598
ராஜாஜெய்சிங் 95785-88925 (அகல்விளக்கு)

இந்த சங்கமம் குறித்து விருப்பமுள்ளவர்கள் தங்கள் வலைப்பக்கத்தில் இடுகையாக எழுதி அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள். இந்த சங்கமத்தைச் சிறப்பாக நடத்திட ஈரோடு பகுதி பதிவர்கள் அனைவரையும் கைகோர்க்க அன்போடு அழைக்கிறேன்.

இந்த சங்கமத்தில்
* பதிவர்களுக்கிடையேயான அறிமுகம்
* நட்பை மேம்படுத்துதல்
* பதிர்வர்கள் வாசிப்பாளர்கள் பரஸ்பரம் சந்திக்கும் வாய்ப்பு
* பதிவுலகம் பற்றி சந்தேகங்களுக்கு தீர்வு
* எழுதுவது பற்றிய தயக்கத்தை தகர்த்தல்
* சமூகம் மற்றும் இலக்கியம் சார்ந்த பகிர்வு

அனைத்து நண்பர்களும் இதையே சங்கமத்திற்கான அழைப்பாக கருதி கலந்து கொள்ள வேண்டுகிறோம்

எங்கள் கொங்கு மண்ணுக்குரிய மணத்தோடு, மனதோடு... உங்கள் அனைவரையும் சந்திக்க காத்திருக்கிறோம்...

சங்கமம் குறித்த வால்பையனின் இடுகை

என்னுடைய மின்னஞ்சல் முகவரி: namakkalshibi@gmail.com

0 பின்னூட்டங்கள்:

Free Website Hosting