BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Monday, October 05, 2009

திரைவிமர்சனம் : எந்திரன்- தி ரோபோ

படம் வரும் வரும்னு எத்தினி நாளுக்குத்தான் தேவுடு காக்குறது! அதான்! இப்பவே எழுதி வெச்சிட்டேன்! படம் ரிலீசான பிறகும் படிச்சா ஒண்ணியும் பெரிசா வித்தியாசமும் இருக்க்கப்போறதில்லை!

ரோபோ- இயந்திர மனிதன் என்கிற பொருளில் படத்தின் தலைப்பு இருப்பதால் படம் முழுக்க ஒரு ரோபோ (ஜட்ஜ்மெண்ட் ஆர்னால்டு போல ரோபாகவே வருவார் என்றோ அல்லது "என் இனிய இனியந்திரா" தொடரில் வருவது போல சில காட்சிகளுக்காவது "நான் ரனினி நீ ஐஸ்வர்யா, நான் ரஜினி நீ ஐஸ்வர்யா" என்றெல்லாம் தத்துப்பித்தென்று டயலாக் பேசிக்கொண்டோ வருவார் என்றெல்லாம் எதிர்பார்த்து தியேட்டரிலோ/அல்லது திருட்டு டிவிடொ பிளேயர் முன்பொ அமர்ந்திருந்தீர்கள் என்றால் ஐ யாம் வெரி ஸாரு டூ ஸே! அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை!

தமிழ்ச்சினிமா மசாலா டிரெயிலர் கலாச்சாரத்தில் இருந்து சற்றும் விலகாத இன்னுமொரு காஸ்மெடிக் மசாலதான் இதுவும்! டியெடிலர் காட்சிகளில் காண்பிக்கப்படும் பரபரப்பான காட்சிகள் படம் முழுக்க வியாபித்திருக்கும் என்று நினைத்துப் போனால் அந்த டியெயிலர் காட்சிகளிலேயெ இரண்டு படத்தின் நீளம் கருதி கத்தரிக்கப் பட்டிருக்கக் கூடும்!

ஒரு சோத்துக்கு ஒண்ணே முக்கால் பானை பதம் - என்பதே தமிழ்ச்சினிமா விளம்பர யுக்தி! இதே யுக்திதான் ரோபோவும்!

ரோபோ எனப்படும் அரதப் பழசான(இந்தப் படம் ரிலீஸாக்கியிருக்கும் நேரம் என் அண்ணன் மகன் அழகர் கார்த்திக் கூட இந்த டெக்னாலஜியை அரதப் பழசு என்றுதான் சொல்லக் கூடும், இப்போ அவனுக்கு வயசு டிசம்பர் வந்தா 1) இயந்திர மனிதன் கெட் அப் பை மாட்டிக்கொண்டு ஓரிரண்டு காட்சிகளில் வந்து போகிறார். கந்தசாமியில் கோழி வேஷம் போட்ட சீயான் மாதிரி! விளம்பரப் படங்களை பார்த்து நாம் ஏதோ வித்தியாசமான கெட் அப் என்று நம்பி போயி உட்கார்ந்தோம் அல்லவா! அதே கதைதான் இங்கேயும்!

சங்கர் சார்: ரொபாடிக் எஞ்சினியரிங்க் இப்ப ஒண்ணாம் வகுப்பு சிலபஸ்லயே வரப் போகுதாம். பசங்களுக்கு உங்க படத்தை பார்த்தா காமெடியா இருக்கப் போகுது! பசங்க கூட டெக்லாலஜிக்கல் லாஜிக் ஓட்டைகளை விமர்சிக்கப் போகிறார்கள்! என்ன செய்யப் போறீங்களோ? :(


படம் பிரம்மாண்டம் என்று சொல்லப்(விளம்பரப்படுத்தப்)படும் இன்னொரு காரணம் : கதாநாயகி : முன்னால் உலக அழகி ஐஸ்வர்யா ராய்!

நடனக் காட்சிகளில் நளினம். ஜீன்ஸ் போலவே! அதையெ எல்லாப் படத்திலும் பார்த்துகிட்டிருக்க முடியுமா? வித்தியாசமா வில்லி ரோல் கொடுத்தப்ப வேணாம்னுட்டீங்க! அதுக்குப் பழிவாங்கிட்டாங்க பார்த்தீங்களா? உங்களுக்கும் இந்தப் படத்துல ஈக்வெல் ரோல்னு வேற சொன்னாங்க! அதுக்காக தன்னோட ரோல் லெவலை தலைவர் இவ்ளோ மட்டமா குறைச்சிக்குவாருன்னு எதிர்பார்க்கவே இல்லை! உங்களுக்குப் பதிலா ஏதாச்சும் ஒரு மொக்கக துணை நடிகையைப் போட்டிருந்தாலும் ஒண்ணும் வித்தியாசம் இருந்திருக்கப் போறதில்லைன்னு உங்களுக்கு நெசமாவெ புரியலயா தாயி?

ஐஸ்வர்யாவேதான் ஜோடியா வேணும்னு அவங்க கால் ஷீட்டுக்காக்வே காத்திருந்து இப்படியொரு மொக்கை அவசியமா தலவரே! பொண்ணு பொருள் புகழ் இதெல்லாம் நம்ம பின்னாடி வரும்னு எப்பவோ சொன்னீங்களே தலைவா! ஓ! அதெல்லாம் டயலாக்கா! நீங்களா சொன்னதில்லையா! அப்ப சரி!


கதை : என்னாது கதையா? டைரக்டர் அடிக்க வருவாரே! தலைவர் படத்துல வேற என்னங்க எதிர்பார்க்குறீங்க! நாட்டுக்கு நல்ல செய்யற தலைவர்! விஞ்ஞான விபரீங்களை நிகழ்த்தி பணம் பண்ண நினைக்கிற வில்லன்! அவனை நல்ல விதமா திருத்த நினைச்சி வீதிக்கு வந்துடறாரு! ஒரே பாட்டுல எல்லாட் டெக்னாலஜியும் கத்துகிட்டு வில்லனோட ரூட்லயே களத்துல குதிக்கிறாரு! நடுவுல வில்லனோட மாமன் மகள் ஐஸ்வர்யா கூட காதல்! வெளிநாடெல்லாம் போயி டூயட் பாடி புரொடியூசர் வயித்துல கொஞ்சம் புளியயக் கரைச்சிட்டு திரும்ப வந்து வில்லனோட மோதுறாரு!

பாடல்கள்: வைரமுத்து & பா.விஜய்!
கேக்க இனிமையான பாடல்களா இருந்திருக்க வேண்டியது! சங்கர் & ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியாச்சே! பிரம்மாண்டம்னு சொல்லி பின்னியெடுத்திருக்காங்க! பாடல்கள் புரியணும்னா கையோட ஒரு டிக்ஷனரியும் கொண்டு போங்க!

பாவம் வைரமுத்து! பா.விஜய் தற்கால லௌகீகங்கள் புரிஞ்சவர்! சோ நோ வரீஸ்!


நடனம்: ராஜூ சுந்தரம், அதிக வேலையில்லை இவருக்கு! தலைவர் படத்துல டான்ஸா? ஹே ஹே ஹெஹெஹேஹே!


சண்டைப் பயிற்சி : யூயேன் வூ பிங், பேரைச் சொல்றதே சண்டை போடுற மாதிரி இருக்குல்ல! படத்துலயும் அம்புட்டுத்தான்! தலைவருக்குத்தான் இதெல்லாம் சரிப்பட்டு வரதில்லையே! அப்புறம் ஏன் இந்த காமெடி?

ஒளிப்பதிவு ஓகே! சவுண்ட் & சயிண்டிஃபிக் எஃபெக்ட்ஸ் என்ற பெயரில் இம்சையைக் கூட்டி இருக்கிறார்கள்! என்ன கொடுமை சார் இது! நாங்க பாவம்! அழுதுடுவோம்!
காஸ்ட்யூம் டிசைன் : இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்காலம்! ஆங்கில படங்கள் அல்லது ரொபாடிக் எஞ்சினியரிங்க் ஸ்டூடண்ட்ஸ்கிட்டே கேட்டிருக்கலாம்! அட இரும்பு மனிதன் ஆர்ச்சி காமிக்ஸெல்லாம் ரெஃபர் பண்னியிருக்கலாம்! அனிமேஷன்ஸெல்லாம் இப்பொ கார்டூன் நெட்வர்க்லயே நல்லா இருக்கு! அதைவிடவே இதெல்லாம்..............!
என்னவோ போங்க! நிறைய எதிர்பார்த்து போனா காலி பெருங்காய டப்பாதான்! மத்தபடி குழந்தைகளை கூட்டிட்டு பொயி பூச்சாண்டி காட்டலாம்! வெளி உலகம் தெரியாத தாய்மர்ர்களுக்கு வித்தியாசமான ஒரு சப்ஜெக்ட்! ஆனா பிடிக்குமே என்பது பில்லியன் டாலர் கேள்விக்குறி?

41 பின்னூட்டங்கள்:

மின்னுது மின்னல் said...

சூப்பர் கண்டிப்பா பிச்சிகிட்டு போகும் :)

மின்னுது மின்னல் said...

ஐ யாம் வெரி ஸாரு டூ ஸே!
//

யாரு அந்த சாருவா தள ?

:)

கிறுக்கன் said...

நான் அழுதுட்டேன் தலைவா ...அவ்வளவு சோகம்...படத்தில

வெடிகுண்டு முருகேசன் said...

A செண்டரில் ரிசல்ட் பரவாயில்லை B, C செண்டர் மக்களுக்கு போய் சேருமானு தெரியலை..?

ரஜினிக்காக பார்க்கலாம்

வெடிகுண்டு முருகேசன் said...

ஐஸ்வர்யா ராய்யை வில்லன் தூக்கிபோகும் போது டாப் ஆங்கிள் கேமரா சும்மா கிர்ருனு சுத்தி ரஜினியை ஜும் பண்ணும் பாருங்க....

சான்ஸே இல்லை

கேமரா மேனுக்கு ஒரு சல்யூட் !!!

ஆர்னால்டு said...

தள முதல் புகைப்படம் சூப்பர் படத்தில் இந்தே சீனே வரலையே கத்தரி போட்டுடாங்கலோ..?

இல்ல மாக்கள் பயந்து விடுவாங்கனு சென்சார் விடலையா?

ச்சின்னப் பையன் said...

:-)))))))))))))))))

நாமக்கல் சிபி said...

//இல்ல மாக்கள் பயந்து விடுவாங்கனு சென்சார் விடலையா?
//

படத்தைப் பார்க்க வரப் போறது மாக்கள் தான்னு சொல்ல வரீங்களா மிஸ்டர். ஆர்னால்ட்?

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நான் இரண்டு மாதங்களுக்கு முன்பே எழுதி போட்டு விட்டேன்.

உங்களுடைய விமர்சனம் மிக விரிவாக உள்ளது.

பழமைபேசி said...

Anonymous said...

பழமைபேசி said...
//

சூப்பர் :)

படத்தில் ஒன்னுமே இல்லை என்பதை சிம்பாலிக்கா சொல்லிட்டிங்க :)

குசும்பன் கொலவெறி சொறி படை said...

படத்தைப் பார்க்க வரப் போறது மாக்கள் தான்னு சொல்ல வரீங்களா மிஸ்டர். ஆர்னால்ட்?

//

:))
:))))

வெடிகுண்டு முருகேசன் said...

ஸ்டார்ட் மியுஜிக் :)

1/1

கைப்புள்ள said...

விமர்சனம் நல்லா தான் இருக்கு. ஆனா திருட்டு விசிடில பாத்ததுக்கு இந்த விமர்சனம் கொஞ்சம் ஓவர் தான்.
:)

வால்பையன் said...

இதுவரைக்கும் வந்த சங்கர் படத்தில் மனிதர்கள் வித்விதமா தப்பு செய்யுறவங்களை தண்டிப்பாங்க!
இந்த படத்தில் ரோபோ தண்டிக்கபோவுது!

இது தான் கதைன்னு எங்களுக்கு தெரியுமே!

Anonymous said...

ரோபோ ரஜினி போடற டிரஸ் எல்லாம் இஸ்லாமியரை அவமானபடுத்தும் செயல். மொத்ததில் ரோபோ பார்பன இந்துத்துவ வெறியோடு வந்த படம்

வெடிகுண்டு முருகேசன் said...

ஸ்டார்ட் மியுஜிக் :)

2/2


வெற்றி வெற்றி

வெடிகுண்டு முருகேசன் said...

இது தான் கதைன்னு எங்களுக்கு தெரியுமே!
//

நாங்க படமே பார்த்துட்டு பதிவு போடுரோம்

இவருக்கு கதை தான் தெரியுமாம்

:)

நாகை சிவா said...

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


துரோகீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

வெடிகுண்டு முருகேசன் said...

கள்ள வோட்டு போடுவதென்பது என்ற ராஜ ரகசியமெல்லாம் கரைத்து குடித்துவிட்டாயடா.. முருகேசா.. :)

வெடிகுண்டு முருகேசன் said...

நாகை சிவா said...

யோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


துரோகீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ
//

யெஸ் துரோகம் பண்ணுரவங்களை அழிக்கும் கதை தான் :)

வெடிகுண்டு முருகேசன் said...

மின்னுது மின்னல் said...

சூப்பர் கண்டிப்பா பிச்சிகிட்டு போகும் :)

///

எது..?

குயிக் கன் முருகன் said...

//வெடிகுண்டு முருகேசன் said...
மின்னுது மின்னல் said...

சூப்பர் கண்டிப்பா பிச்சிகிட்டு போகும் :)

///

எது..?
//
அதான்!

SanjaiGandhi said...

:))))

Anonymous said...

poda venna

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

படம் மட்டும் பிய்ச்சுக்கிட்டு போச்சுன்னு வையி..

மவனே.. உன்னை ஆய்ஞ்சிருவாங்க ஆய்ஞ்சு..!

வந்தியத்தேவன் said...

இந்தப் படத்தில் தலைவர் அரசியலுக்கு வருவ‌து பற்றிப் பேசியிருக்கிறாராம்.
ஐஸ்வர்யா ராயை நடிக்கவைத்து ஷங்கர் தன் ஆரிய பக்தியைக் காட்டிவிட்டார் என விமர்சனங்கள் வரும்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

/// உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
படம் மட்டும் பிய்ச்சுக்கிட்டு போச்சுன்னு வையி..

மவனே.. உன்னை ஆய்ஞ்சிருவாங்க ஆய்ஞ்சு..!

Mon Oct 05, 11:59:00 PM ///

எந்த இடத்துல ...

நாமக்கல் சிபி said...

//இந்தப் படத்தில் தலைவர் அரசியலுக்கு வருவ‌து பற்றிப் பேசியிருக்கிறாராம். //

படமே காமெடி என்பதால் நான் காமெடி டிராக் பற்றி தனியே எழுதவில்லை வந்தி!

டூபாக்கூர் தலீவர் said...

சினுமாவை அடுத்த லெவலுக்கு எடுத்துச் செல்ல ராவும் பவலுமா உழைத்துக் கொண்டிருக்கிற கலையுலக ரட்சகர்களை இப்படி கலாயக்க என்ன தகிரியம், இருங்க இருங்க 4 கோடி ரூவாய் கேட்டு உங்கள கோர்ட்டுக்கு இழுக்க போறாய்ங்க ;-)

Anonymous said...

படம் 2011 தீபாவளிக்கு ரிலீஸ் :)

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட , உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்களுக்கு நீங்கள் கடைசியாக எழுதிய ஐந்து பதிவுகளை சிறு படங்களாக வலது அல்லது இடது பக்கத்தில் இடம்பெறச் செய்ய இந்த gadaget ஐ இணையுங்கள்
gadget ஐ பெற இங்கே செல்லவும்

tamil10 .com சார்பாக
தமிழினி
நன்றி

Anonymous said...

:))

சென்ஷி said...

அசத்தல்!

Kolipaiyan said...

கொஞ்சம் ஓவரா தான் இருக்கு உங்க விமர்சனம். தலைவரை இப்படி வாரிடீன்களே சிபி.

ஷாகுல் said...

அப்போ சன் டிவி காலியா?

ராம்ஜி.யாஹூ said...

how abt paarppaneeyam shankar, rajni, maaran

ரங்குடு said...

நேத்தி வரைக்கும் படம் வந்த பின்னாடி தான் பிரிச்சு மேயுவீங்க. இப்போ என்னடான்னா படத்துக்கு பூஜை
போட்ட கையோட விமரிசனமும் போடறீங்களே, இது அடுக்குமா ?

Anonymous said...

கிகிகிகிகி ஹைய்யோ...இதை விட எந்திரன் படத்தை யாருமே பாராட்ட முடியாது..

இராஜலெட்சுமி பக்கிரிசாமி said...

aiyo.........

முகிலன் said...

அந்த வில்லனைப் பாத்து ரஜினி ஒரு லுக்கு விட்டுட்டு வசனமே பேசாம பார்வையாலயே பேசுவாரு பாருங்க தியேட்டர்ல அப்ளாஸ் அள்ளுது.

ஒண்ணு மட்டும் எனக்கு புரியவேயில்ல. ஐஸ்வர்யா நடிச்சிருக்கிறதா சொன்னாங்க, ஆனா தலைவருக்கு ஜோடியா ஒரு ஆயா தான் வருது.. நீங்க எங்கனாச்சும் பாத்திங்களா என்ன?