BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Thursday, March 11, 2010

நக்கீரனின் விளம்பரமும், பிட்டு பட போஸ்டரும்

நித்யானந்தா கதவைத் திறந்து அம்பலமானாலும் ஆனாரு! ஊடகங்களுக்கு கல்லாக் கட்ட வசதியா போச்சு! அதிலும் குறிப்பா நக்கீரன் இதழுக்கு!

அந்த வீடியோ காட்சிகளைக் கொஞ்சம் கொஜ்சமா ஸ்நாப் எடுத்து வெச்சிகிட்டு வாரா வாரம் பார்ட் பார்ட்டா போட்டு யாவாரம் பார்க்க முடிவெடுத்துட்டங்க போல! சரு புத்தகத்துலதான் போடுறாங்க! போடட்டுமேன்னு விட்டா அதை வேற பெரிசா போஸ்டர் கணக்கா அச்சடிச்சு ஒவ்வொரு பொட்டிக்கடை வாசல்லயும் தொங்க விட்டிருக்காங்க!

யப்பா! கொஞ்சமாச்சும் யோசிக்க வேண்டாமா? நம்ம பொது மக்கள், பரீட்சை எழுதப் போகும் மாணவ மாணவிகள், சிறுவர்கள், குடும்பத்து உறுப்பினர்கள் சாதாரணமா நடந்து/கடந்து போகும் பொது இடங்களிலெல்லாம் இப்படிப்பட்ட போஸ்டரை மாட்டி வெச்சிருக்கீங்களே!

உங்க தெருவுல, உங்க வீட்டு வாசல்ல ஒரு மலையாள பிட்டு பட போஸ்டரை ஒட்டி வெச்சா சகித்துக் கொள்வீர்களா? அல்லது அந்த படத்துக்கான விளம்பரம்னு விட்டு வைப்பீங்களா?

உங்க விளம்பரத்துக்கும், மலையாள பிட்டு பட போஸ்டருக்கும் என்ன வித்தியாசம் இருக்குன்னு நினைக்கிறீங்க?
எனக்குத் தெரிஞ்சி ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கு!
பிட்டு பட போஸ்டர்ல A போட்டு வட்டம் போட்டிருக்கும்! உங்க விளம்பரத்துல அது இல்லை! அவ்வளவுதான்!

சினிமா போஸ்டருக்கு, பலான புத்தகங்களுக்கெல்லாம் ஆர்ப்பாட்டம் செஞ்சி தடை செய்யும் அமைப்புக்கள்/தணிக்கை குழுக்கள் கண்ணுல இந்த போஸ்டரெல்லாம் ஆபாசாமா தெரியலையா? அல்லது இது சட்டப்படி பொது மக்களை எவ்விதத்துலயும் பாதிக்கவில்லைன்னு நினைக்கிறாங்களா? இதை சகிச்சிக்க முடியும் தணிக்கைக் குழுக்கள் சட்டத்தால ஏன் பிட்டு படங்கள் (அவங்களாவது அடல்ட்ஸ் ஒன்லின்னு அறிவிப்பாச்சும் செஞ்சிடறாங்க), பலான புத்தகங்கள் விற்பனையை சகிச்சிக்க முடியலை!

ஓ! பலான புத்தங்க விற்பனை தாராளமா நடந்தா, நக்கீரன் மாதிரி புத்தங்கங்களுக்கு வியாபாரம் படுத்துடும்னு(!?) போட்டியில்லாம வியாபாரம் பண்ண சட்டத்துக்கு/தணிக்கை அமைப்புகளுக்கு ஸ்பெஷல் சம்பளம் தந்துடுறாங்களா?


நக்கீரன் : சமூகப் பொறுப்புள்ள பத்திரிக்கை/இன்வெஸ்கேடிவ் ஜர்னலிசம்ன்னெல்லாம் பேர் வெச்சிகிட்டு ஏன்யா இப்படி மஞ்சள் பத்திரிக்கை வியாபாரம் செய்யுறீங்க?

பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் மீதான மரியாதையை நீங்களேதான் கெடுத்துக்குறீங்க!

ம்ஹூம்! இதுக்கு மேல என்னத்தைச் சொல்ல! இவங்க மேல பொது நல வழக்குப் போட ஏதாச்சும் வழி இருக்கா?

13 பின்னூட்டங்கள்:

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

சிபியாரின் இந்தக் கண்டன அறிக்கையில் எனது பெயரையும் இணைத்துக் கொள்ளுமாறு மாநக்கலாரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்..!

நாமக்கல் சிபி said...

நக்கீரனோடு சேர்த்து உண்மைத் தமிழன் அண்ணாச்சிக்கும் எனது கண்டனங்கள்!

மஞ்சூர் ராசா said...

சரியான நேரத்தில் சரியான கட்டுரை.


நக்கீரன் மிகவும் மட்டமான மஞ்சள் பத்திரிகையாக மாறிவிட்டது. அவர்களுக்கு வியாபாரம் ஒன்றுதான் குறி.

மஞ்சூர் ராசா said...

சரியான நேரத்தில் சரியான கட்டுரை.


நக்கீரன் மிகவும் மட்டமான மஞ்சள் பத்திரிகையாக மாறிவிட்டது. அவர்களுக்கு வியாபாரம் ஒன்றுதான் குறி.

கோவி.கண்ணன் said...

பெண்களுடன் உல்லாசம் என்று தலைப்பு இட்டுவிட்டு ரஞ்சிதா படம் மட்டும் தான் போட்டு இருக்கிறார்கள், வாசகர்களுக்கு நீதி கிடைக்கனும், அனைத்து படங்களையும் வெளியிட நீதிமன்றம் உடனே ஆவண செய்ய வேண்டும் என்று வழக்கு போடு.

சென்ஷி said...

/ நாமக்கல் சிபி said...

நக்கீரனோடு சேர்த்து உண்மைத் தமிழன் அண்ணாச்சிக்கும் எனது கண்டனங்கள்!//

ஹா ஹா ஹா

நல்ல வேளை நான் கண்டன அறிவிப்பு செய்யலை :))

சென்ஷி said...

// கோவி.கண்ணன் said...

பெண்களுடன் உல்லாசம் என்று தலைப்பு இட்டுவிட்டு ரஞ்சிதா படம் மட்டும் தான் போட்டு இருக்கிறார்கள், வாசகர்களுக்கு நீதி கிடைக்கனும், அனைத்து படங்களையும் வெளியிட நீதிமன்றம் உடனே ஆவண செய்ய வேண்டும் என்று வழக்கு போடு.//

போதுமா அண்ணாச்சி!

தண்டோரா ...... said...

நீங்களும்தான் காமிராவும் கையுமா சுத்தறீங்க..ம்ம்..

"உழவன்" "Uzhavan" said...

நல்ல கேள்வி

Kannan said...

HOT>

அபுஅஃப்ஸர் said...

மக்கள் மறக்க நினைத்தாலும் இந்த கண்ராவிய திரும்ப கண்முன்னே கொண்டுவாரானுங்க‌

thiruvenkatathan said...

good show.keep it up.from
Tiruvenkatathan bala

chinnathambi said...

நக்கீரன் மிகவும் மட்டமான மஞ்சள் பத்திரிகையாக மாறிவிட்டது. அவர்களுக்கு வியாபாரம் ஒன்றுதான் குறி


100% correct