BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Wednesday, March 10, 2010

விண்ணைத் தாண்டி வருவாயா.....?


ஒரு போயடிக் ரொமாண்டிக் ஸ்டோரின்னு காலேஜ் பசங்களெல்லாம் சொன்னதைக் கேட்டு நேத்து செகண்ட் ஷோ போயிருந்தேன்! சும்மா சொல்லக் கூடாது! காலேஜ் பசங்களெல்லாம் ரொம்பவே சிலாகிச்சித்தான் சொல்லிட்டிருந்தாங்க! அதுவும் ரெண்டு தடவை பார்த்தேன் மூணு தடவை பார்த்தேன்னு வேற என்னோட ஆர்வத்தீயை அதிகமாக்கி வேற விட்டிருந்தாங்க!

படம் போட்டபிறகு பார்த்தா டைட்டிலே அமர்க்களமா இருந்தது! டைட்டிலே கண்ணுக்கு அவ்ளோ அழகு! ஃபோட்டோ கிராஃபி அமர்க்களம்! லொக்கேஷன்ஸும் அருமை! போயடிக்கான படம் என்பதால் இசையும் நல்லா எதிர்பார்க்கலாம்! நம்ம ஏ.ஆர்.ஆர் வேற! பட் எனக்கு அங்கதான் கொஞ்சம் ஏமாற்றம்!

பாடல்களில் மனது லயிக்கும் வண்ணம் பாடல்கள் வரிகளை டாமினேட் செய்யாமல் இசை கூடவே இழையோடி வந்திருக்க வேண்டும் இது போன்ற திரைப்படங்களில்! ஆனால் இங்கே ஏ.ஆர்.ரஹ்மான் கலக்கி இருக்கிறார்! பாடல்கள் வரிகள் முதல் முறை கேட்கும்போது மனதில் பதிய மறுக்கிறது!
கவிஞர் தாமரையின் பாடல்கள். மியூசிக் டாமினேட் செய்யுதே! என்ன செய்ய!

(இந்த விஷயத்தில் இளையராஜா, ஃபாசில் கூட்டணி நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை!)



சிம்பு : நடித்திருக்கிறார்! நிஜமாத்தாங்க! அவரோட பழைய படங்களில் இருந்த துள்ளல், விசுக் விசுக் கென்று காட்டும் விரல் வித்தைகள் மிஸ்ஸிங்க்! நடிப்பு இம்ப்ரூவ் ஆகி இருக்கின்றது! பாரட்டுக்கள்!

விஜய்க்கு ஒரு பூவே உனக்காக போல சிம்புவிற்கு இது திருப்புமுனையாக அமையும் வாய்ப்பு இருக்கிறது!

த்ரிஷா - வழக்கமான துறுதுறுப்பு இல்லாமல் க்யூட் அண்ட் கொயட்டாக வருகிறார்! குடும்பச் சூழ்நிலையைத் தாண்டி காதலுக்காக வெளியே வர இயலாத ஒரு கண்ட்ஸ்ட்ரெயிண்ட் அவருக்கு! செல்ஃப் கண்ஸ்ட்ரெயிண்ட்தான்! ஆனாலும் அதையும் மீறி அவருக்குள்ளும் காதல் தோன்றுகிறது!
கண்களுக்குள் காதலை வைத்துக் கொண்டு அதை வெளியே தெரியாமல் மறைக்கப் படாதபாடு படுகிறார்!

ஆனாலும் சிம்புவுக்கு பார்த்தவுடனே அவரோட மனசுல காதல் தோன்றி, அவரைப் போட்டுத்தாக்கும் அளவுக்கு.... ம்ஹூம் அந்த அளவுக்கு இல்லை. ஜஸ்ட் கியூட் அவ்வளவுதான்! (ஒரு வேளை இளவட்டப் பசங்களுக்கு மனசுல புகுந்து குத்தாட்டம் போடுமோ என்னவோ)
அல்லது சிம்புவோட கண்கள் வழியா பார்க்கணுமோ!

த்ரிஷாவை விரட்டி விரட்டி லவ்வும் சிம்புவும், ஆரம்பத்தில் காதலில் விழுந்தாலும் அதைக் கடைசியில் கை கழுவும் த்ரிஷாவும் என செல்கிறது கதை!

இன்னும் எத்தனை படத்துலதான் பெண்ணின் தகப்பனார்கள் தன் பிணத்தைப் பார்த்துட்டு அந்தப் பையனை கல்யாணம் பண்ணிக்கோன்னு பிளாக் மெயில் பண்ணுவாங்களோ! மாப்பிள்ளைன்னு வந்தாலே ஃபாரின்லே வேலை செய்யுற மாப்பிள்ளைகள் வருவாங்களோ!

நல்ல நல்ல லொக்கேஷன்ஸ்! அருமையான ஃபோட்டோகிராஃபி!

பாடகளில் கதையோடு பொருந்தாத வெளிநாட்டு வாலிபர்கள்/வாலிபிகள் கூட நடனமாடுகிறார்கள்! ஒரு பாட்டில் என்றால் ஓக்கே! எல்லாப் பாடல்களிலுமா?

திரைக்கதை, கிளைமாக்ஸ் எல்லாம் ஓக்கே!

இளவட்டப் பசங்களுக்கு, காதலிக்க ஃபிகர் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, காதலித்து முடித்தவர்களுக்கு..... திரும்பத் திரும்பப் பார்த்து ஃபீல் ஆகிக் கொள்ள வைக்கும் படம்!

விண்ணைத் தாண்டி வருவாயா? - எ நைஸ் ஃபீலிங்க்ஸ்!

9 பின்னூட்டங்கள்:

*இயற்கை ராஜி* said...

//இளவட்டப் பசங்களுக்கு, காதலிக்க ஃபிகர் தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு, காதலித்துக் கொண்டிருப்பவர்களுக்கு, காதலித்து முடித்தவர்களுக்கு..... திரும்பத் திரும்பப் பார்த்து ஃபீல் ஆகிக் கொள்ள வைக்கும் படம்!
//


ungalukku epdi? athai mothalla sollunga....:-)

*இயற்கை ராஜி* said...

thrisha photo pottu irukkekga.... mmmm... ithu avagalukku theriuma?

:-))))

Kannan said...

Nice feeling...

நாமக்கல் சிபி said...

இயற்கை!

அவங்களுக்குத் தெரிஞ்சாலும் கவலை இல்லை!

//ungalukku epdi? athai mothalla sollunga....:-)//

:))

நாமெல்லாம் வயசானவங்க!
உங்களுக்கும் என்னை மாதிரித்தான் இருக்கும் பாருங்க!

நாமக்கல் சிபி said...

//Nice feeling...//

நன்றி கண்ணன்!

இரா.ச.இமலாதித்தன் said...

/சிம்புவோட கண்கள் வழியா பார்க்கணுமோ!//
நீங்க எது வழியா பார்த்தீங்க...?
நல்ல விமர்சனம்.


//சிம்பு : நடித்திருக்கிறார்! நிஜமாத்தாங்க! அவரோட பழைய படங்களில் இருந்த துள்ளல், விசுக் விசுக் கென்று காட்டும் விரல் வித்தைகள் மிஸ்ஸிங்க்! நடிப்பு இம்ப்ரூவ் ஆகி இருக்கின்றது! பாரட்டுக்கள்!//

சிம்பு : உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருக்கும்போது நான் ஏன் ஜெசிய லவ் பண்ணினேன்....?

நா சி : நீ லவ் பண்ணினா தானே விண்ணைத்தாண்டி வருவாயா ன்னு ஒரு படத்தின் விமர்சனத்தை நான் எழுத முடியும்

சிம்பு : எனக்கு நடிக்க தெரியாதுங்க....சத்தியமா எனக்கு நடிக்க தெரியாது...

நா சி : என்ன பண்ணி தொலைக்கிறது ஏதோ அப்படி போட்டுட்டேன்.அடுத்த படம் நீ நடிச்சா அப்படி போட மாட்டேன்..பீல் பண்ணாத...

இமலாதித்தன் : அவரு தான் நடிப்பு வராதுன்னு சொல்லிட்டார்ல்ல..அப்பறமும் ஏன் நீங்க அவரை நடிக்க சொல்றீங்க..?

சிம்பு : அவ்வவ்வ்வ்வ்...
நா சி : அவ்வவ்வ்வ்வ்...

Anonymous said...

பாடல்களில் மனது லயிக்கும் வண்ணம் பாடல்கள் வரிகளை டாமினேட் செய்யாமல் இசை கூடவே இழையோடி வந்திருக்க வேண்டும் //
சரியா சொன்னீங்க பாடல்கள் பிரபலம் ஆகாததற்க்கு இதுவும் ஒரு காரணம்

Kumky said...

போயடிக் ரொமாண்டிக் ஸ்டோரி..

யென்னா தலைவரே பிரெஞ்சு எப்ப கத்துகிட்டீங்க...

காலேஜ் பசங்களெல்லாம்.....

அவிங்க கூட உங்களுக்கு என்ன தொடர்பு..?

சிம்பு : நடித்திருக்கிறார்..

தெய்வமே...தெய்ய்ய்ய்ய்வமே...
காண்டு கொண்டேன் தெய்ய்ய்வமே...

அவரு இங்லி பிச்சை பேசுற அழகு ஒன்னு போறதா தல...

படத்துக்கு குடும்பத்தோட போயிட்டமா..
(எனக்கு எங்க இந்த காலேசு பயங்க மாட்ட மாட்டேங்குறாங்களே)

உலகத்துல எத்தனையோ பொன்னுங்க இருக்கும் போது எனக்கு ஏன் இந்த ஜெஸ்ஸிய புடிச்சிருக்குன்னு தெரியலையே....

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
இத எத்தன தடவைங்நா சொல்லுவானுங்க...காதுல ரத்தமே வந்துடுச்சுங்நோவ்..

கயல் said...

:-))

Free Website Hosting